இனிமே ரசிகர்களை ஏமாத்த முடியாது.. அரசியலுக்கு போறேன்!.. எம்.ஜி.ஆர் சொன்னது இதுதான்!...

தமிழ் சினிமாவில் மிகப்பெரிய ஆளுமையாக இருந்தவர் நடிகர் எம்.ஜி.ஆர். மொத்த சினிமா உலகமும் ஒரு நடிகருக்கு கட்டுப்பட்டது எனில் அது எம்.ஜி.ஆருக்காகத்தான். 60களில் அவரை சின்னவர் என எல்லோரும் அழைப்பார்கள். நடிகர் திலகம் சிவாஜி கணேசனும் எம்.ஜி.ஆர் மீது அன்பும், மரியாதையும் வைத்திருந்தார்.
அவரை எப்போதும் அண்ணன் என்றே அழைப்பார். பெயர் சொல்ல மாட்டார். எம்.ஜி.ஆரும் ‘தம்பி கணேசா’ என பாசமுடன் அழைப்பார். இருவருக்கும் சினிமாவில் போட்டி இருந்தாலும் நிஜவாழ்வில் இல்லை. ஆனாலும், அரசியல் காரணங்களால் இருவரும் மோதிக்கொண்டது நடந்தது.
இதையும் படிங்க: விஜயகாந்த் படம் பார்த்தாலே நான் அழுதிடுவேன்!.. பல நினைவுகள்!. ஃபீலிங்ஸ் காட்டும் நடிகர்!..
சிவாஜியை விட பல வயது மூத்தவர் எம்.ஜி.ஆர். நாடகங்களில் 30 வருடங்கள் நடித்த பின்னர் தனது 37வது வயதில்தான் சினிமாவில் நுழைந்தார். அதன்பின் 10 வருடங்கள் சின்ன சின்ன வேடங்களில் நடித்துவிட்டு 47வது வயதில்தான் ராஜகுமாரி படத்தில் ஹீரோவாக மாறினார். ஆனால், தனது தோற்றத்தை இளமையாக காட்ட பல விஷயங்களையும் அவர் செய்தார். சினிமா என்பதே இல்லாததை இருப்பது போல் காட்டும் முயற்சிதான். நிஜவாழ்வில் நடக்க வாய்ப்பே இல்லாத விஷயங்களை ரசிக்கும்படியான பல பொய்கள் மூலம் சொல்வதுதான் சினிமா.
50 வயதிலிருந்து 65 வயது வரை எம்.ஜி.ஆர் சினிமாவில் நடித்தார். துவக்கத்தில் கருப்பு வெள்ளை படங்களில் மட்டுமே நடித்து வந்தார் எம்.ஜி.ஆர். ஒருகட்டத்தில் சினிமா கலருக்கு மாறியது. அதன்பின்னரும் பல படங்களில் நடித்தார். ஒருபக்கம், அரசியலில் தீவிரமாகி தனிக்கட்சி முதல்வராகிவிட்டார். அதன்பின் அவர் ஆசைப்பட்டும் சினிமாவில் நடிக்க முடியவில்லை.
இதையும் படிங்க: எம்.ஜி.ஆர் கொடுத்த எம்.பி. பதவியை ஏற்க மறுத்த நடிகை!.. இதுதான் காரணமா?..
எம்.ஜி.ஆரிடம் பல வருடங்களாக மேக்கப் மேனாக இருந்தவர் பீதாம்பரம். எம்.ஜி.ஆர் அரசியலில் தீவிரமான பின் ஒரு படத்தில் நடித்தார். அப்போது அவருக்கு மேக்கப் போட்டுகொண்டே ‘நீங்க அரசியலுக்கு போயிட்டா நான்லாம் என்ன பண்றது?’ என பீதாம்பரம் புலம்பி இருக்கிறார். அபோது எம்.ஜி.ஆர் சொன்னது இதுதான்.
கருப்பு வெள்ளையில் சினிமா இருந்தவரை ரசிகர்களை ஏமாற்றலாம். வயது தெரியாது. ஆனால், கலர் சினிமாவில் கேமரா ஆங்கிள் மூலம் ஏமாற்றினாலும் வயது காட்டி கொடுத்துவிடும். அதனால்தான், சினிமாவை விட்டுவிட்டு அரசியலுக்கு போக முடிவெடுத்தேன்’ என சொன்னாராம் எம்.ஜி.ஆர். இந்த பீதாம்பரத்தின் மகன்தான் பின்னாளில் தமிழ் சினிமாவை கலக்கிய இயக்குனர் பி.வாசு என்பது குறிப்பிடத்தக்கது.