Cinema History
உங்களாலதான் படம் ரிலீஸாகவே இல்ல!. வாலியிடம் கோபப்பட்ட எம்.ஜி.ஆர்.. நடந்தது இதுதான்!..
mgr vaali: வாலிபக் கவிஞர் என பெயரெடுத்தவர் கவிஞர் வாலி. ஏனெனில் எம்.ஜி.ஆர் முதல் எஸ்.ஜே சூர்யா வரை 4 தலைமறைகளுக்கு பாடல்களை எழுதி அசத்தியவர் இவர். காதல், தத்துவம், சோகம், அம்மா செண்டிமெண்ட் என பல சூழ்நிலைகளுக்கும் பல நூறு பாடல்களை எழுதியிருக்கிறார்.
50,60களில் எம்.ஜி.ஆரின் பல படங்களுக்கு பாடல்களை எழுதியவர் கண்ணதாசன். ஆனால்,கருத்து வேறுபாட்டால் எம்.ஜி.ஆர் படங்களுக்கு கண்ணதாசன் பாடல்களை எழுதுவதை நிறுத்திவிட்டார். அப்போது வாலியை தன்னுடன் சேர்த்துக்கொண்ட எம்.ஜி.ஆர் தனது படங்களில் தொடர்ந்து வாலியை எழுத வைத்தார்.
இதையும் படிங்க: எல்லா பாட்டும் எழுதினது நான்! ஆனா பேரு யாருக்கு தெரியுமா? ரஜினி படத்தில் நடந்த குளறுபடிய சொன்ன வாலி
எம்.ஜி.ஆருக்கு வாலி எழுதிய பல பாடல்களும் சூப்பர் ஹிட்டாகவே அமைந்தது. நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால்.. ஏன் என்ற கேள்வி இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை போன்ற பல பாடல்கள் எம்.ஜி.ஆரினி அரசியல் வாழ்க்கைக்கு அடித்தளம் அமைத்தது.
தான் நடிக்கும் படங்களில் பாடல் வரிகள் நன்றாக வரவேண்டும் என்பதில் எம்.ஜி.ஆர் உறுதியாக இருப்பார். அதுமட்டுமில்லாமல் வார்த்தைகளுக்கு ஒரு சக்தி இருப்பதாக நினைக்கும் எம்.ஜி.ஆர் எதிர்மறையான வார்த்தைகள் பாடலில் வரக்கூடாது என நினைப்பார். வாலியிடம் ‘வார்த்தைகளை பார்த்து எழுதுங்கள்.. தமிழில் பல அறச்சொற்கள் உண்டு. ஒரு சொல் வெல்லும்.. ஒரு சொல் கொல்லும்’ என அடிக்கடி சொல்வாராம்.
இதையும் படிங்க: நடிப்பை பார்த்து வாலி அடித்த கமெண்ட்!.. எம்.ஜி.ஆருக்கு வந்த கோபம்!.. அடுத்து நடந்ததுதான் ஹைலைட்!..
எம்.ஜி.ஆர், வாணிஸ்ரீ, அசோகன் உள்ளிட்ட பலரும் நடித்து 1970ம் வருடம் உருவான திரைப்படம் தலைவன். இந்த படத்திற்கு எம்.ஜி.ஆரே பண உதவியும் செய்திருந்தார். ஆனாலும், திட்டமிட்டபடி இப்படத்தை முடிக்க முடியவில்லை. இந்த படத்தில் பாடல்கள் எழுதிய வாலி ஒரு பாடலில் ‘நீராடி மண்டபத்தில் தென்றல் நீந்திவரும் நள்ளிரவில் தலைவன் வாராமல் காத்திருந்தாள்’ என எழுதியிருந்தார்.
இதுபற்றி பேசிய வாலி ‘படத்தின் பெயர் தலைவன். பாடலில் ‘தலைவன் வாராமல் காத்திருந்தாள்’ என அறச்சொல்லை எழுதியதால்தான் படம் வெளிவரவில்லை என எம்.ஜி.ஆர் என்னிடம் கோபப்பட்டார். ஆனால், சில மாதங்களில் அந்த படம் வெளியானது’ என அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஜெயலலிதாவை பார்த்ததும் வாலி எழுதிய பாடல்!.. கவிஞருக்கு குசும்பு ரொம்ப அதிகம்தான்!..