தாயின் மரணத்துக்கு கூட போக முடியாம தவிச்ச நகேஷ்!.. அவர் வாழ்க்கையில் இவ்வளவு சோகமா!..
Actor nagesh: தமிழ் திரையுலகில் சிறந்த நடிகர்களை தேர்ந்தெடுத்தால் அதில் நாகேஷுக்கு முக்கிய இடம் உண்டு. காமெடிதான் அவரின் அடையாளம் என்றாலும் பல திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் நடித்திருக்கிறார். அதோடு, சர்வர் சுந்தரம், எதிர் நீச்சல் போன்ற சில படங்களில் கதையின் நாயகனாக கலக்கி இருக்கிறார்.
சினிமாவில் நடிப்பதற்காக தான் பார்த்து வந்த மத்திய அரசு வேலையையே விட்டவர் இவர். கவிஞர் வாலி சினிமாவில் பாடல் எழுத முய|ற்சி செய்து கொண்டிருந்தபோது அவருடன் அறையில் தங்கி சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடியவர்தான் நாகேஷ். எனவே, நாகேஷும் வாலியும் ‘வாடா போடா’ நண்பர்கள்.
இதையும் படிங்க: லீவு கொடுக்காத மேனேஜர்!.. நாகேஷ் செய்த அலப்பறை!.. மனுஷன் அப்பவே அப்படித்தான்!..
கஷ்டப்பட்டு சினிமாவில் நுழைந்த நாகேஷ் எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெய் சங்கர் என பல ஹீரோக்களின் படங்களிலும் நடித்து ரசிகர்களை சிரிக்க வைத்தார். நாகேஷ் போல டைமிங்கில் வசனம் பேசி நடிக்கும் நடிகர் யாரும் கிடையாது. 60களில் முன்னணி காமெடி நடிகராக இருந்த நாகேஷ் ஒரே நேரத்தில் 5 படங்களில் நடிப்பார்.
இதனால் அவரின் வருகைக்காக எம்.ஜி.ஆர், சிவாஜி ஆகியோரே படப்பிடிப்பு தளங்களில் காத்திருப்பார்கள். ஏனெனில், அப்போது படங்களில் வெற்றிக்கு நாகேஷ் தேவைப்பட்டார். நாகேஷ் ஒன்றும் பணக்கார குடும்பத்தில் இருந்து சினிமாவுக்கு வந்தவர் இல்லை. இவரின் சொந்த ஊர் தாராபுரம். அவரின் அம்மா அங்கே தங்கியிருக்க நாகேஷ் ரயில்வேயில் வேலை செய்துகொண்டே சினிமாவில் சின்ன சின்ன வேடங்களில் நடித்திருக்கிறார்.
இதையும் படிங்க: சுந்தர் சி-யிடம் வாய்ப்பு கேட்ட நாகேஷ்!. அதுவும் எப்படி தெரியுமா?.. இப்படியெல்லாம் நடந்துச்சா!…
மேலும், வாய்ப்பு ஒன்றும் பெரிதாக இல்லை.. கஷ்டப்பட்டு கொண்டுதான் இருக்கிறேன் என அடிக்கடி கடிதம் எழுதுவார். கஷ்டப்பட்டு சினிமாவில் சம்பாதித்து ஒரு காரை வாங்கி கையில் 50 ஆயிரம் பணத்துடன் அம்மாவை பார்க்க தயாராகி கொண்டிருந்தார். ஆனால், அவரின் அம்மா இறந்துவிட்டதாக அவருக்கு செய்தி கிடைத்தது. அதிர்ச்சியுடன் அழுது கொண்டே காரை எடுத்துக்கொண்டு தாராபுரம் சென்றார்.
இவர் செல்ல நேரமானதும் இவருக்காக காத்திருக்காமல் அம்மாவின் உடலை மயானத்திற்கு எடுத்து சென்றுவிட்டனர். நாகேஷ் ஊருக்குள் போனபோது ஒரு பாலம் குறுக்கிட்டது. வைக்கோல் ஏற்றப்பட்ட வண்டிகள் தொடர்ந்து வந்து கொண்டே இருந்ததால் நாகேஷ் காத்திருக்க வேண்டியதாயிற்று. அப்போது கரைக்கு அந்த பக்கம் அவரின் அம்மாவுக்கு வேறு ஒருவர் கொள்ளி வைத்துக்கொண்டிருந்தார்.
அம்மாவின் முகத்தை கூட பார்க்க முடியாமல் போன நாகேஷுக்கு பல நாட்கள் தூக்கம் வரவில்லை. ஆனாலும், இரவு பகலாக நடித்து தனது கவனத்தை திசை திருப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சிகரெட்டுக்கு வந்த தடை!.. கறார் காட்டிய தயாரிப்பாளர்!.. நாகேஷ் செஞ்சதுதான் ஹைலைட்!…