Connect with us

Cinema History

மிடுக்காகப் பேர் வெச்ச இயக்குனர் இமயம்…! 27வயதில் 60 வயது கேரக்டரில் அசத்திய அறிமுக நடிகர்…!

உயரமான கம்பீரமான நடிகர் நெப்போலியன். இவரது ஆரம்ப காலப் படங்கள் எல்லாமே அதிரடிதான்…முதல் படத்தில் நடித்தது குறித்து நடிகர் நெப்போலியன் என்னென்ன கருத்துகளை சொல்கிறார் என்று பார்ப்போமா…

பாரதிராஜாவின் புதுநெல்லு புதுநாத்து படத்தில் அவரது நடிப்பைப் பல தரப்பினரும் பேசினர். அப்பா வேடம் என்றால் மனிதர் பிச்சி உதறுவார். பல படங்களில் கதாநாயகனாகவும் வந்து அசத்தினார்.

எனது 16 வயசிலருந்தே திமுகவுக்காக வேலை செய்தேன். என் மாமா கே.என்.நேரு 1986ல் புல்லம்பாடில யூனியன் சேர்மனுக்கு எலக்ஷனுக்கு நிக்கிறாரு. 1989ல் லால்குடி சட்டமன்ற வேட்பாளரா நின்று ஜெயிச்சாங்க. அப்போ அந்த எலெக்ஷன்ல திமுகவுக்காக வேலை செஞ்சேன்…

Nepoleon2

மின்துறை அமைச்சர் பதவியைக் கலைஞர் கொடுத்தாரு. அவருக்கு உதவியாளரா 2 வருஷம் இருந்தேன். அங்கே ஆண்பாவம் சினிமா சூட்டிங்…பார்த்தேன். பிரண்ட்ஸ்லாம் சொன்னாங்க…

உதயம் படம் பாருப்பா…உன்னை மாதிரியே ஒருத்தர் நடிச்சிருக்காருன்னாங்க. உதயம்னு நாகர்ஜூன் படம் பார்த்தேன். நேருவின் மைத்துனர் எனக்கு சிபாரிசு கடிதம் தந்து பாரதிராஜாவைப் பார்க்க சொன்னார். புதுநெல்லு புதுநாத்து படத்துக்கு வாய்ப்பு கிடைச்சது.

Actor Nepoleon

என்னடா 27 வயசுல அதுவும் முதல் படத்துலயே 60 வயசு கிழவன் வேஷம்னு நினைச்சேன்…குமரேசன் தான் அப்போ எனது இயற்பெயர். திடீர்னு உனக்கு பேரு மாத்துறேன்னாரு. நெப்போலியன்னு பேரு வச்சாரு. ரிலீஸ்க்கு 2 நாளுக்கு முன்னாடி அந்தப் பேரை வச்சாரு. உலகம் பேரு வாங்குன பேரை வச்சதால ஹாலிவுட்லயும் நாலு படத்தை நடிச்சிட்டேன்.

எனக்கு உன்னைப் பார்த்தா பழைய நடிகர் எஸ்.வி.ரங்கராவ் ஞாபகம் வருதுடா. கண்டிப்பா நீ நல்லா வருவன்னாரு. அவரு வாய் முகூர்த்தம் எனக்கு அப்படியே அமைஞ்சது.

பாலசந்தர் சாருக்கு டைரக்டர் புதுநெல்லு புதுநாத்து படத்தைப் போட்டுக் காட்டுனாரு. எல்லாரையும் பார்த்து பாராட்டினாரு பாலசந்தர். என்னை மட்டும் பாராட்டலையேன்னு சங்கடமா இருந்தது. அப்போ பாரதிராஜா சார் கவனிச்சாரு. சார்…சார்…னு கூப்பிட்டாரு…சார் பண்ணையார் கேரக்டர படத்துல பார்த்தீங்கள்ல…அதுல நடிச்சது இந்தப் பையன்தான்னாரு…

Puthu Nellu Puthu Naathu

அவரு கையைப் பிடிச்சி குலுக்கி….பிரமாதம்பான்னு சொல்லிட்டுப் போனார். பத்திரிகைகளில் எல்லாம் 27 வயசுப் பையன் கிழவன் வேஷத்துல நடிச்சிருக்காருன்னு நியூஸ் வர படம் ரொம்ப ஹிட்டாயிட்டு. எனக்கும், சுகன்யாவுக்கும் அந்தப் படத்துல மிகப்பெரிய பேர் வந்தது. அடுத்து அடுத்து நிறைய படங்கள் வர ஆரம்பிச்சுது… எம்ஜிஆர் நகரில், சின்னத்தாயி, பரதன்னு வரிசையாக படங்கள் வந்த வண்ணம் இருந்தன. அப்போ பார்க்க கம்பீரமா இருந்தேன். அதனால டிஎஸ்பி கேரக்டரை எனக்குக் . கிடைச்சது. இந்தப்படம் சபாபதி இயக்க 1992ல் எனது 4வது படமாக வெளியானது.

 

 

google news
Continue Reading

More in Cinema History

To Top