அந்த நடிகர மனசில நினைச்சி எனக்கு பாட்டு போடுங்க!.. தேவாவிடம் சத்தியராஜ் சொன்ன நடிகர் யார் தெரியுமா?...
Music Director Deva: இளையராஜா பீக்கில் இருந்தபோதே அவருக்கு போட்டியாக சினிமாவில் நுழைந்தவர் தேனிசை தென்றல் தேவா. பிரசாந்த் ஹீரோவாக அறிமுகமான வைகாசி பொறந்தாச்சி திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானார். தமிழ் சின்மாவில் பல திரைப்படங்களுக்கும் இசையமைத்தவர் இவர்.
90களில் பல முன்னணி இயக்குனர்கள் மற்றும் நடிகர்களின் படங்களில் இசையமைத்துள்ளார். ரஜினிக்கும் அண்ணாமலை, அருணாச்சலம், பாட்ஷா ஆகிய படங்களில் இசையமைத்துள்ளார். கமலுக்கும் அவ்வை சண்முகி உட்பல பல படங்களுக்கும் இசையமைத்துள்ளார். மேலும், விஜய், அஜித், விஜயகாந்த், சத்தியராஜ், சரத்குமார் என பலரின் படங்களுக்கும் இவர் இசையமைத்தார். இளையராஜா, ஏ.ஆர். ரஹ்மான் ஆகியோரிடம் செல்ல முடியாதவர்கள் தேவாவிடம் சென்றனர்.
இதையும் படிங்க: விஜய், அஜித் படம் ஓடாது என நினைத்தேன்… ஆனா நடந்ததே வேற! ஆச்சர்ய தகவலை சொன்ன தேவா!
தேவாவும் பல ஹிட் பாடல்களை கொடுத்தார். இவரின் மகன் ஸ்ரீகாந்தும் இசையமைப்பாளர்தான். இவரும் பல படங்களுக்கு இசையமைத்ததோடு, பல நூறு படங்களுக்கு பின்னணி இசை அமைத்துள்ளார். தற்போது தேவாவுக்கு மார்க்கெட் போய்விட்டது. அவரின் இசையில் எந்த படமும் வெளியாவதில்லை.
ஆனால், ஊடகங்களில் பேட்டி கொடுத்து வருகிறார். சமீபத்தில் ஊடகம் ஒன்றில் பேசிய தேவா பல தகவல்களை பகிர்ந்து கொண்டார். நான் பல நடிகர்களுக்கும் இசையமைத்திருக்கிறேன் எல்லா நடிகர்களும் பாடலை பாராட்ட மாட்டார்கள். ரஜினி மட்டும் பாடலை கேட்டு உடனே போன் செய்து பாராட்டுவார்.
இதையும் படிங்க: தெரியாத தொழில தொட்டான் கெட்டான்… முடியவே முடியாது சொன்ன தேவா.. அடம் பிடித்த தனுஷ்!
கமல் ரெக்கார்டிங் தியேட்டரிலேயே இருப்பதால் அங்கேயே பாராட்டி விடுவதால் அவருக்கு போன் செய்யும் வேலையே இல்லை. விஜய், அஜித் இருவரும் ஒரு நாளும் பாடல் நன்றாக இருக்கிறது என பாராட்டியதே இல்லை. அதேபோல், சில ஹீரோக்களுக்கு மட்டுமே சில பாடல்கள் பொருந்தும். நல்ல பாட்டாக இருந்தாலும் சில நடிகர்கள் நடித்தால் ஹிட் ஆகாது. இதில், சத்தியராஜ் மிகவும் நல்ல மனிதர். அவரிடம் எந்த ஈகோவும் இருக்காது. ‘தேவா சார் என்னை நினைத்து பாட்டு போடாதீர்கள். அஜித்தை நினைத்து பாட்டு போடுங்கள்’ என அடிக்கடி சொல்லுவார்.
தனுஷின் மன்மத ராசா பாடல் ஹிட் அடிக்கவே எனக்கும் அதேபோல் ஒரு பாட்டு போட்டு கொடுங்கள் என கேட்டார். அப்படி உருவான பாடல்தான் அடிதடி படத்தில் ‘உம்மா உம்மம்மா உம்மா உம்மம்மா’ என தேவா கூறினார்.
இதையும் படிங்க: ரஜினியை சாதாரணமா நினைச்சிட்டு இருக்காங்க! அவர் வாய்முகூர்த்தம் – இப்ப வரைக்கும் நடக்குது – நெகிழ்ச்சியில் தேவா