கும்பகோணத்தில் பிறந்து அரச பரம்பரை மருமகனாகப் போகும் சித்தார்த்! அதான் இத்தனை ப்ரேக் அப்பா?
Actor Siddharth: சமீபத்தில் சித்தார்த் அதிதி ராவ் ரகசியமாக திருமணம் செய்து கொண்டார்கள் என கூறி ஒரு சில புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. ஆனால் அது வெறும் மோதிரம் மட்டுமே மாற்றிக் கொண்டு நிச்சயதார்த்தம் செய்து கொண்டார்கள் என பின்னர் செய்தி வெளியானது. இந்த நிலையில் சித்தார்த்தின் வாழ்க்கை பயணத்தை பற்றி மூத்த பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு அவர் சேனலில் கூறினார்.
கும்பகோணத்தில் பிறந்த சித்தார்த் தன் கல்லூரி படிப்பிற்கு பிறகு மணிரத்தினத்திடம் உதவி இயக்குனராக சேர்ந்தார். அந்த நேரத்தில்தான் பாய்ஸ் பட ஆடிசன் நடைபெற்றது. முன்னா கதாபாத்திரத்தை தவிர மற்ற கதாபாத்திரத்திற்கு நடிகர்களை தேர்வு செய்த சங்கர் முன்னா கேரக்டருக்கு பல நடிகர்களை யோசித்து பார்த்திருக்கிறார். அப்போது எழுத்தாளர் சுஜாதா அந்த கேரக்டரை தெரிந்து இதற்கு தகுதியான ஒரு பையன் மணிரத்தினம் யுனிட்டில் இருக்கிறான் . அவனை போய் பாருங்கள் என சொல்லியிருக்கிறார்.
இதையும் படிங்க: அடிச்சு தூக்கும் ஆடுஜீவிதம்!.. 3 நாளில் இத்தனை கோடி வசூலா?.. மலைத்துப் போன மலையாள திரையுலகம்!..
ஷங்கர் அங்கு சென்று பார்க்க யுனிட் முழுவதும் துரு துருவென சுற்றிக் கொண்டிருந்தாராம் சித்தார்த். அப்படியே பிடித்து பாய்ஸ் படத்தில் போட்டுவிட்டார். அந்தப் படத்தின் வெற்றி தெலுங்கு தேசத்தில்தான் அதிகமாக பிரதிபலித்திருக்கிறது. அதனால் தெலுங்கில் ஏகப்பட்ட படங்களில் நடிக்க வாய்ப்பு வர தொடர்ந்து நடித்து வந்தாராம். ஏற்கனவே சித்தார்த் துடுக்குத்தனமாக பேசக் கூடியவர்.
தெலுங்கு மீடியாவில் கொஞ்சம் அதிகமாக பேச மொத்தமாக சித்தார்த்தை ஓரங்கட்டியது. அதனால் தமிழில் ஒரு சில படங்களில் நடித்து வந்தார். இருந்தாலும் சொல்லிக் கொள்ளும் படி பட வாய்ப்புகள் வரவில்லை. தெலுங்கில் மகாசமுத்திரம் என்ற படத்தில் சுருதிஹாசனுடன் ஜோடி சேர்ந்த சித்தார்த் அந்தப் படம் பெரிய அளவில் வெற்றிப் பெற்றது. கூடவே இருவருக்கும் காதல் மலர்ந்தது. லிவிங் டூ கெதரில் இருந்தனர். அதன் பிறகு பிரேக் அப் ஆனது.
இதையும் படிங்க: இதுதான் என் ட்ரீம் புராஜெக்ட்!.. கடைசி வரை சூர்யாவை விடுறதா இல்லை போல கெளதம் மேனன்!..
இவரை அடுத்து சமந்தாவுடன் ஒரு படத்தில் ஜோடியான சித்தார்த் சமந்தாவுடனும் காதலில் சிக்கியிருக்கிறார். அவர்களுக்குள்ளும் மனக் கருத்து ஏற்பட சமந்தாவை விட்டும் பிரிந்தார். இதற்கு மத்தியில் ஏற்கனவே மேக்னா என்ற பெண்ணை திருமணம் செய்திருந்தாராம் சித்தார்த். அவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவகாரத்து பெற்றுக் கொண்டார். இப்போது அதிதி ராவுடன் திருமணம் நடைபெற இருக்கிறது.
இவர்களுக்கு தெலுங்கு தேசத்தில் பிரசித்தி பெற்ற ஒரு வெங்கடாசலபதி கோயிலில்தான் சமீபத்தில் நிச்சயம் நடந்தது. அந்த கோயில் அதிதியின் கொல்லு தாத்தா கோயிலாம். அவர் அந்த ஊரின் சிற்றரசராக இருந்தவராம். எந்த தெலுங்கு தேசம் விரட்டியடித்ததோ அதே தெலுங்கு தேசத்தின் அதுவும் அரச பரம்பரை மருமகனாக போகிறார் என்று செய்யாறு பாலு கூறினார்.
இதையும் படிங்க: தனுஷால கார்த்தி பட வாய்ப்பை இழந்த இயக்குனர்! விஷயம் தெரிஞ்சு கார்த்தி என்ன சொன்னார் தெரியுமா?