Cinema History
ஹீரோவுக்கு ஷூ லேசை அவுத்துவிடும் வேஷம்!.. அசிங்கப்பட்ட சிவாஜி!.. அட அந்த படமா?!..
சினிமாவில் ஒரு நடிகர் ஒரு படத்திலேயே மேலே போய் விட முடியாது. பல படங்களில் நடித்த பின்னரே அவருக்கென ஒரு மார்க்கெட் உருவாகும். ரசிகர்கள் உருவார்கள். அந்த இடத்தை அடையும் வரை பல அவமானங்களை சந்திக்க நேரிடும். இது எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, விஜயகாந்த், சத்தியராஜ் என பலருக்கும் பொருந்தும்.
இதில் சிவாஜி மட்டும் கொஞ்சம் விதிவிலக்கு. ஏனெனில், முதல் படத்திற்கு முன்பும், அந்த படம் உருவாகும்போதும் சில அவமானங்களை சந்தித்திருக்கிறார். ஆனால், படம் வெளியான பின்பு அல்ல. பராசக்தி படம் உருவானபோது அவரை தூக்கிவிட்டு வேறு ஒரு ஹீரோவை போட்டு எடுக்கலாம் என்று கூட ஏவிஎம் நிறுவனம் நினைத்தது.
இதையும் படிங்க: சிவாஜியின் நடிப்பு இப்படித்தான் இருக்கும்!.. இளம் நடிகர்கள் சொல்வது என்ன தெரியுமா?…
ஆனால், அந்த படத்தை ஏவிஎம் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்தவரும், சிவாஜியின் நாடக குருவுமான பெருமாள் முதலியார் அதற்கு சம்மதிக்கவில்லை. சிவாஜிதான் ஹீரோ என்பதில் அவர் உறுதியாக இருந்த காரணத்தினால்தான் பராசக்தி படத்தில் சிவாஜி தொடர்ந்து நடித்தார்.
முதல் படமே சூப்பர் ஹிட் அடிக்கவே சிவாஜிக்கு பல படங்களில் நடிக்கும் வாய்ப்பு வந்தது. அதன்பின் சிவாஜி எவ்வளவு பெரிய உச்சத்தை தொட்டார் என்பது எல்லோருக்கும் தெரியும். நடிப்பு என்றால் சிவாஜி.. சிவாஜி என்றால் நடிப்பு என மாறிப்போனது. பல விதமான கதாபாத்திரங்களில் நடித்து நடிப்புக்கே இலக்கணமாக மாறினார்.
ஆனால், அதே சிவாஜி பராசக்தி படத்தில் நடிப்பதற்கு முன் சந்தித்த அவமானம் பற்றித்தான் இங்கே பார்க்கபோகிறோம். எஸ்.எஸ்.வாசன் தயாரிப்பில் 1948ம் வருடம் வெளிவந்த திரைப்படம் சந்திரலேகா. இந்த படத்தில் எம்.கே.ராதா ஹீரோவாக நடித்திருந்தார். இந்த படத்தில் ஒரு காட்சியில் குதிரையிலிருந்து கீழே இறங்கி வரும் எம்.கே.ராதாவின் ஷூ லேசை பணியாள் ஒருவர் கழட்டிவிட வேண்டும். இதற்காக ஒரு நாடக நடிகரை கொண்டு வந்தனர்.
இதையும் படிங்க: நடிகர்களோட கடைசி படங்கள் பற்றி பார்ப்போமா?!.. மறக்க முடியாத சிவாஜி – விஜயகாந்த்
ஆனால், அவரை ஏற இறங்க பார்த்த எஸ்.எஸ்.வாசன் ‘என் நேரத்தை வீணாக்காதீர்கள்’ என சொல்லிவிட்டு அவரை நிராகரித்தார். மேலும், மாலினி என்கிற படத்தில் நடித்த ஒரு நடிகருக்கு அந்த வேஷத்தை கொடுத்தார். பராசக்தி படம் உருவானபோது எஸ்.எஸ்.வாசன் வாய்ப்பு கொடுத்த அந்த நடிகரை ஹீரோவாக நடிக்க வைக்கலாம் என முடிவு செய்தனர். அவரின் வீட்டுக்கு சென்று அவரின் அம்மாவிடம் பேசியபோது தனது மகன் ஹானஸ்ட் பரிட்சை எழுதவிருப்பதால் சினிமாவில் நடிக்க மாட்டான் என சொல்லிவிட்டார்.
எனவே, ஷூ லேசை அவிழ்த்துவிடும் வேஷம் கிடைக்காமல் நிராகரிக்கப்பட்ட நடிகரை நடிக்க வைத்தனர். அவர்தான் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். ஷூ லேசை அவிழ்த்துவிடும் வேஷத்தில் நடித்தவர் நடிகர் வி.கோபாலகிருஷ்ணன். பின்னாளில் பல திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.