ஒரு வேளை இருக்குமோ? அஜித்துடன் செட்டில் எஸ்.ஜே. சூர்யா.. வைரலாகும் புகைப்படம்
SJ Suryah: இப்போது தமிழ் சினிமாவில் இவர் இல்லாத படங்களை பார்க்கவே முடியாது. அந்த வகையில் பெரிய பெரிய பட்ஜெட் படங்களாகட்டும் சின்ன படங்களாகட்டும் இவருக்கு என ஒரு கதாபாத்திரத்தை இயக்குனர்கள் வடிவமைத்து விடுகிறார்கள். அப்படி ஒரு வில்லனாக குணச்சித்திர கதாபாத்திரமாக நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் தன் பக்கம் ஈர்த்தவர் நடிகர் எஸ் ஜே சூர்யா.
ஆரம்பத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர். அடுத்து இயக்குனராக வாலி திரைப்படத்தின் மூலம் இந்த தமிழ் சினிமாவில் அறிமுகமானார். முதல் படமே அஜித்தை வைத்து ஒரு பிளாக்பஸ்டர் ஹிட்டை கொடுத்த எஸ் ஜே சூர்யா அடுத்ததாக விஜயை வைத்து குஷி திரைப்படத்தையும் இயக்கினார். அந்தப் படமும் மிகப்பெரிய ஹிட்.
இதையும் படிங்க: தங்கலானுக்கு விருது கொடுக்கலனா பிரச்சனை பண்ணுவோம்!… பொங்கும் ரசிகர்கள்!…
இந்த இரு படங்களின் வெற்றிக்கு பிறகு தொடர்ந்து படங்களை இயக்குவார் என நினைத்திருந்த நிலையில் அடுத்து ஹீரோவாகவே நடிக்க ஆசைப்படுவதாக கூறினார். அதன் அடிப்படையில் பல படங்களில் ஹீரோவாக நடித்தார் எஸ் ஜே சூர்யா. அதில் ஒரு சில படங்கள் மக்களை கவர்ந்தது. ஒரு சில படங்கள் பல விமர்சனங்களை சந்தித்தது.
அந்த விமர்சனத்திற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக வில்லன் நடிகராக மாறினார் எஸ் ஜே சூர்யா. அதிலிருந்து இப்போது வரைக்கும் ஏன் இந்தியன் 2 வரைக்கும் அவர்தான் மெயின் வில்லன். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு படங்களிலும் வில்லனாகவே நடித்து வருகிறார் எஸ் ஜே சூர்யா. விஜய், கமல் என டாப் ஸ்டார்களுக்கு வில்லனாக நடிக்கும் எஸ் ஜே சூர்யா அடுத்து எப்போது அஜித்துக்கு வில்லனாக நடிப்பார் என்ற ஒரு கேள்வி அஜித் ரசிகர்கள் தரப்பில் இருந்து வந்தது.
இதையும் படிங்க: இதெல்லாம் ஒரு காமெடியா?!.. எஸ்.கே. படத்தை கலாய்த்த உதயநிதி!. ஆனா நடந்ததே வேற!…
அந்த அளவுக்கு எஸ் ஜே சூர்யாவை அஜித்துடன் பார்க்க ஆசைப்பட்டார்கள். அதற்கு ஒரு பேட்டியில் எஸ் ஜே சூர்யாவும் பதில் அளித்து இருந்தார். ஏனென்றால் அஜித்தை வைத்து இப்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் திரைப்படம் குட் பேட் அக்லி. கடைசியாக ஆதிக் ரவிச்சந்திரனின் இயக்கத்தில் எஸ் ஜே சூர்யா மார்க் ஆண்டனி திரைப்படத்தில் வில்லனாக மாஸ் காட்டி இருந்தார்.
அதன் காரணமாக அஜித் படத்தில் நீங்கள் நடிப்பதற்கு வாய்ப்பு இருக்கிறதா என்ற ஒரு கேள்வியை கேட்டனர். அதற்கு எஸ் ஜே சூர்யா தெரியவில்லை எனக்கும் ஆசைதான் என பதில் அளித்து இருந்தார். இந்த நிலையில் தற்போது ஒரு புகைப்படம் வெளியாகி ரசிகர்கள் மனதில் ஒரு பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
இதையும் படிங்க: உன்ன பாத்து பாத்து ஏங்கி போறோம்!.. டைட் பனியனில் சூடேத்தும் ஜெயிலர் பட நடிகை!..
நீண்ட வருடங்களுக்குப் பிறகு தன்னுடைய ஆசானை சந்தித்து விட்டதாக கூறி அஜித்துடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு எஸ் ஜே சூர்யா தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருக்கிறார். ஒரு வேளை குட் பேட் அக்லி திரைப்படத்தில் எஸ் ஜே சூர்யாவும் நடிக்கிறாரா என்ற ஒரு சந்தேகம் அனைவரும் மனதிலும் இருக்கின்றது. ஏனெனில் இந்த புகைப்படம் ஒரு செட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம் போலவே தெரிகிறது.