Cinema News
அண்ணனை போல யாரும் இல்ல! விஜயகாந்த் நினைவிடத்தில் தேம்பி தேம்பி அழுத சூர்யா! வைரலாகும் புகைப்படம்
Actor Surya: தமிழ் சினிமாவில் ஒரு மாஸ் ஹீரோவாக வலம் வரும் சூர்யா இன்று கேப்டன் விஜயகாந்த் நினைவிடத்திற்கு வந்து மலர்வளையம் வைத்து கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தும் வீடியோதான் இன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.
கோலிவுட்டில் ஒரு உச்சம் பெற்ற நடிகராக இருந்து வரும் சூர்யா இன்று இந்த உயரத்தை அடைவார் என்று அவரது குடும்பமே எதிர்பார்க்கவில்லை. ஏனெனில் ஆரம்பத்தில் சூர்யாவை சினிமாவில் நடிக்க சிவக்குமாருக்கு துளியும் விருப்பமில்லையாம்.
இதையும் படிங்க: விடாமுயற்சி படக்குழுவுக்கு கொடுத்த ஷாக்கை ஏற்கனவே தன்னுடைய ஹிட் இயக்குனருக்கும் அஜித் கொடுத்திருக்கிறாராம்?
அதற்கேற்றாற்போல சூர்யாவும் படிப்பு , வீடு என ஒரு செல்லப்பிள்ளையாகவே இருந்திருக்கிறார். வெளிஉலகம் தெரியாதவராகவே வளர்ந்திருக்கிறார். யாரிடமும் சகஜமாக பேசமாட்டாராம். எப்போதும் அமைதியாகத்தான் இருப்பாராம். அதனால் இவர் சினிமாவிற்கு செட்டாக மாட்டார் என்று சிவக்குமார் வேண்டாம் என்று சொல்லி வந்தாராம்.
ஆனால் விதி யாரை விடும். நேருக்கு நேர் படத்தின் வாய்ப்பு சூர்யாவை தேடி வந்தது. முதல் படம் செம ஹிட். அதுவும் விஜயுடனான காம்போ. இந்தப் படத்தின் வெற்றி அடுத்தப் படத்திற்கான வாய்ப்பையும் கொடுத்தது. அதுதான் பெரியண்ணா திரைப்படம். முதல் படத்தில் விஜயுடன் கூட்டணி.
இதையும் படிங்க: மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு முதன் முதலில் தீனி போட்ட படம்! வாய வச்சுக்கிட்டு சும்மா இருந்தாதான
இரண்டாம் படத்தில் சோலோவாக களம் இறங்கிய சூர்யாவுக்காக அந்தப் படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்க ஒப்புக் கொண்டார் விஜயகாந்த். விஜயகாந்திற்காக அந்தப் படத்தை பார்க்க வருவார்கள் என்ற காரணத்தினால் கேப்டனை நடிக்க வைத்திருக்கின்றனர்.
எதிர்பார்த்த அளவுக்கு அந்தப் படமும் சூப்பர் ஹிட். இப்படி சூர்யாவின் வாழ்க்கையிலும் ஒரு முக்கிய அங்கமாக இருந்திருக்கிறார் கேப்டன். இந்த நிலையில் விஜயகாந்த் மறைவின் போது சூர்யா தனது குடும்பத்துடன் விடுமுறை பயணமாக வெளி நாட்டில் இருந்ததால் அவரால் வர முடியவில்லை. நேற்று தான் சென்னை திரும்பினார் சூர்யார்.
இதையும் படிங்க: ஜட்ஜிடமே மல்லுக்கு நின்ன ஈஸ்வரி.. ஏம்மா அவர என்ன உங்க மருமக பாக்கியானா நினைச்சீங்க!..
வந்ததும் இன்று கேப்டன் நினைவிடத்திற்கு வந்து தேம்பி தேம்பி அழுது கண்ணீர் வடித்து அஞ்சலி செலுத்தினார். அஞ்சலி செலுத்திய பின் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி கொடுத்த சூர்யா ‘அண்ணனை போல யாருமில்லை. அவர் மறைவு எனக்கு ஒரு பெரிய இழப்பு’ என்று கூறினார்.