தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும்னு சும்மாவா சொன்னாங்க!.. அப்பாவுக்கு ஒண்ணுன்னோனே ஓடோடி வந்த விஜய்!..
நடிகர் விஜய் தனது தாய் மற்றும் தந்தையுடன் இருக்கும் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே நடிகர் விஜய்க்கும் அவரது பெற்றோர்களுக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவி வந்த நிலையில் தனி வீட்டில் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார் விஜய்.
மேலும், தனது பெயரையோ புகைப்படத்தையோ தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் அரசியல் காரணங்களுக்காக பயன்படுத்தக் கூடாது என கூறியிருந்தார்.
இதையும் படிங்க: கூட்டத்துல கட்டுச்சோத்த அவுத்த மேக்கப் மேன்!.. லீக்கான KH 234 ரகசியம்.. கடுப்பான கமல்ஹாசன்?..
இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகர் பல மேடைகளிலும் பேட்டிகளிலும் தனது மகன் தன்னை விட்டு பிரிந்து போன வருத்தங்களை பதிவு செய்து வந்தார். நடிகர் விஜய்க்கும், அவரது அப்பா எஸ்ஏ சந்திரசேகருக்கும் ஏற்பட்ட பிரச்சனை கோலிவுட்டில் பூதாகரமாக வெடித்தது.
இந்நிலையில், சமீபத்தில் உடல்நலக் கோளாறு காரணமாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்கிற நிலைக்கு தான் ஆளாக்கப்பட்டு இருப்பதாக வருத்தத்துடன் சந்திரசேகர் தெரிவித்திருந்தார். இப்போதாவது நடிகர் விஜய் அப்பாவை சந்திப்பாரா என்கிற விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது தனது தாய் மற்றும் தந்தையுடன் நடிகர் விஜய் இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: அட்லீ வீட்டிலேயே ஐக்கியமாகிட்டாரா கீர்த்தி சுரேஷ்!.. எல்லாம் எங்க போய் முடியப்போகுதோ!..
தளபதி 68 படத்திற்காக அமெரிக்காவுக்கு சென்றிருந்த நடிகர் விஜய் சென்னை திரும்பிய நிலையில், முதல் வேலையாக தனது தந்தையை சந்தித்துள்ளார். மேலும் தந்தையின் மருத்துவச் செலவிற்கும் நடிகர் விஜய் உதவியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வரும் செப்டம்பர் 15-ஆம் தேதி லியோ படத்தின் செகண்ட் சிங்கிள் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் வரும் செப்டம்பர் 30-ஆம் தேதி சென்னை நேரு ஸ்டேடியத்தில் பிரம்மாண்டமாக லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறும் என்றும் அதில் நடிகர் விஜயின் ஒட்டுமொத்த குடும்பமும் பங்கேற்கும் என்றும் கூறுகின்றனர்.