Categories: latest news

இந்நேரம் கேப்டன் மட்டும் உயிரோட இருந்தா சவுக்கடி நிச்சயம்! கம்முனு இருந்த பிரேமலதா

Actor Vijayakanth: தமிழ் சினிமாவில் அனைவரும் போற்றத்தக்க வகையில் வலம் வந்த நடிகர் கேப்டன் விஜயகாந்த். அவர் மறைந்தாலும் அவருடைய புகழ் என்றென்றும் ஓங்கிக் கொண்டே இருக்கும். இன்று வரை விஜயகாந்த் சமாதியில் நூற்றுக்கணக்கான பேர் வந்து அவரை வணங்கி விட்டு செல்கின்றனர்.

கிட்டத்தட்ட ஒரு கோயில் போலவே அனைவரும் விஜயகாந்த் சமாதியை நினைத்துக் கொண்டிருக்கின்றனர். சினிமாவிலும் சரி அரசியலிலும் சரி ஒரு உன்னதமான மனிதராக வாழ்ந்து வந்தார் கேப்டன் விஜயகாந்த். 150 படங்களுக்கு மேல் நடித்து மக்களின் ஒட்டுமொத்த அன்பையும் பெற்றவர்.

இதையும் படிங்க: சோ சொன்னதை கேட்டு அரசு விருதை வாங்க மறுத்த கண்ணதாசன்!.. காரணம் இதுதான்!..

ஏழைகளுக்கு வாரி வழங்கும் வள்ளல் தன்மை கொண்டவராக விஜயகாந்த் இருந்தார். அனைவருக்கும் சாப்பாடு என்ற வகையில் தன்னைத் தேடி வரும் எல்லோருக்குமே  சாப்பாடு போட்டு அழகு பார்த்தவர். கிட்டத்தட்ட ஒரு குட்டி எம்ஜிஆர் ஆகவே விஜயகாந்த் வாழ்ந்து வந்தார் .அதே சமயம் தவறு எங்கெல்லாம் நடக்கின்றதோ அதை தட்டிக் கேட்கும் ஒரு தைரியமான மனிதராகவும் இருந்து வந்தார்.

இந்த நிலையில் விஜயகாந்த் சமாதிக்கு அகோரி கலையரசன் வந்திருந்த வீடியோ இணையத்தில் வைரலானது. இதைப் பற்றி சினிமா பத்திரிக்கையாளரான செய்யாறு பாலு சில விஷயங்களை பகிர்ந்து இருந்தார். அதாவது இந்நேரம் மட்டும் விஜயகாந்த் உயிரோடு இருந்திருந்தால் கண்டிப்பாக இவருக்கு சவுக்கடி நிச்சயமாக கிடைத்திருக்கும் என செய்யாறு பாலு கூறினார்.

இதையும் படிங்க: ‘குடி’னா ஆண், பெண் இருவருக்கும் சமம்! ஏதோ சொல்லப் போய் வசமாக சிக்கிய விஜய் ஆண்டனி

ஏனெனில் இந்த மாதிரி விஷயங்கள் எல்லாம் கேப்டனுக்கு அறவே பிடிக்காது. அதுவும் இந்த அகோரி கலையரசன் விஜயகாந்த் சமாதியில் வந்து இவரை வந்து வணங்கினால் குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு திருமணம் நடைபெறும் என்றெல்லாம் சொல்லி விஜயகாந்தின் இமேஜையே கெடுத்து விட்டார்.

அது மட்டுமல்லாமல் இவர் பேசிய பேச்சு கிட்டத்தட்ட இந்த இடத்தை ஒரு மாதம் என்னிடம் கொடுத்துப் பாருங்கள். கோடி கோடியாக கல்லா கட்டுகிறேன் என்ற அளவுக்கு தான் இவருடைய பேச்சு இருந்தது என்றும் செய்யாறு பாலு கூறினார். அதாவது விஜயகாந்த் சமாதியை கோயிலாக நினைப்பவர்கள் உண்டு.

இதையும் படிங்க: கமலைப் பார்த்து இப்பவும் பயப்படும் சீரியல் நடிகை… பின்னணியில் இருக்கும் காரணம் இதுதான்!…

ஆனால் அதற்காக இந்த அகோரி கலையரசன் இப்படியெல்லாம் பேசியது பார்க்கிறவர்களை அதுவும் விஜயகாந்த் ரசிகர்களை மிகவும் கோபமடைய செய்தது. ஆனால் பிரேமலதா இதையெல்லாம் சகித்துக் கொண்டு அமைதியாகவே இருந்தார். அவருக்கும் கோபம் வந்திருக்கும். மீடியா நம்மையெல்லாம் கவனித்துக் கொண்டிருக்கின்றது என்பதை மனதில் நினைத்துக் கொண்டே பிரேமலதா ஒன்றும் பேசாமல் அமைதியாக இருப்பதை அந்த வீடியோவில் பார்க்க முடிந்தது என செய்யாறு பாலு கூறினார்.

Rohini

Recent Posts

கௌசல்யாவைப் பார்த்து நானே ஜொள்ளு விட்டிருக்கேன்! – செல்வராகவன் கலகலப்பு!

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…

54 minutes ago

மீண்டும் சீறும் தம்பி : கில்லி,படையப்பா வரிசையில் வசூலில் சாதனை படைக்குமா?

தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…

2 hours ago

நாளை மோதும் 4 முக்கிய படங்கள்

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…

3 hours ago

குடைச்சல் கொடுக்கும் அனிருத்!.. சாய் அபயங்கரிடம் பலரும் போக இதுதான் காரணமா?…

கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…

4 hours ago

தூதுவிட்ட சிவகார்த்திகேயன்!.. No சொன்ன அஸ்வத் மாரிமுத்து!.. பார்ட்டி செம உஷார்!…

ஓ மை கடவுளே திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. முதல் படமே சூப்பர் ஹிட். அதன்பின்…

4 hours ago

ஆமாயா நான் திமிரு பிடிச்சவன்தான்!.. டென்ஷன் ஆன அஜித் தம்பி அனில் குமார்!…

நடிகர் அஜித் குமாருக்கு அனுப்குமார் என்கிற அண்ணனும், அனில் குமார் என்கிற தம்பியும் இருக்கிறார்கள்.. இதில் அண்ணன் அனுப் குமார்…

11 hours ago