Cinema News
சத்யராஜிடம் இப்படி ஒரு வேண்டுகோளை விடுத்த விஜய்சேதுபதி! கட்டப்பா மனசு வைப்பாரா?
Actor Vijaysethupathi: தமிழ் சினிமாவில் ஹீரோவாக பழகுவதை காட்டிலும் மிகவும் சகஜமாக பக்கத்து வீட்டு அண்ணன் , தம்பியாக பழகும் நடிகர்கள் மிகவும் குறைவு. அதில் அனைவருக்கும் நெருக்கமான நடிகர் என்றால் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி.
இவரிடம் பேச ஆரம்பித்தால் போதும். நேரம் போனதே தெரியாத அளவுக்கு நம்மை எங்கேயோ அழைத்துச் சென்று விடுவார். அந்தளவுக்கு தெளிவாக வாழ்க்கைக்கு ஏதுவான சில விஷயங்களை மிகவும் புரியும்தன்மையுடனும் எதார்த்தமாகவும் பேசுவதில் வல்லவர் விஜய்சேதுபதி.
இதையும் படிங்க: ‘கோட்’ படத்தில் விஜய் ஹீரோ இல்லையா?.. சாக்லேட் பாய் இருக்கும் போது நடக்குமா?.. என்னப்பா சொல்றீங்க!..
இந்த நிலையில் இன்று ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில் உருவாகியிருக்கும் சிஙக்ப்பூர் சலூன் படத்தின் டிரெய்லருடன் அதன் ஆடியோ வெளியீட்டு விழாவும் சென்னையில் நடைபெற்றது. அந்த விழாவிற்கு திரைப்பிரபலங்கள் பலரும் வருகை தர சிறப்பு விருந்தினராக விஜய்சேதுபதியும் கலந்து கொண்டார்.
அப்போது மேடையில் பேசிய விஜய்சேதுபதி படத்தை பற்றியும் படத்தின் இயக்குனரான கோகுல் பற்றியும் சில விஷயங்களை பகிர்ந்தார். சிங்கப்பூர் சலூன் படத்தில் சத்யராஜும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அப்போது சத்யராஜை பற்றி விஜய்சேதுபதி பேசும் போது,
இதையும் படிங்க: ஜவ்வா இழுக்கிறதுனா இதானா? எப்பங்க இந்த டைவர்ஸ் கேஸ முடிப்பீங்க!… புலம்பும் ரசிகர்கள்
இப்போது வரைக்கும் சத்யராஜின் அமைதிப்படை மற்றும் சில படங்களை பார்த்து வருவதாகவும் அவரின் காமெடி, ரொமாண்டிக் காட்சிகள் எல்லாவற்றையும் தான் மிகவும் ரசிப்பதாகவும் கூறி உங்க கூட ஒரே ஒரு படத்தில் சேர்ந்து நடிக்க வாய்ப்பு கொடுங்க சார், அதற்காக நான் ஏங்கிக் கொண்டிருக்கிறேன் என்று கேட்டார். அப்படி நடிக்கும் படம் கண்டிப்பாக டபுள் ஹீரோ சப்ஜக்ட் சார்ந்த படமாக இருக்க வேண்டும் எனவும் கெஸ்ட் ரோலில் எல்லாம் உங்களை நடிக்க விட மாட்டேன் என்றும் மிக அன்புடன் கேட்டுக் கொண்டார் விஜய் சேதுபதி.