இந்த கோட்ல பட்டன்லாம் இல்லயா செல்லம்!.. ஓப்பனா விட்டு அதிர வைக்கும் ஆண்ட்ரியா!..

சிறு வயது முதலே மேற்கத்திய இசையில் ஆர்வம் கொண்டவராக வளர்ந்தவர்தான் ஆண்ட்ரியா. பெரிய பாடகி ஆக வேண்டும், நிறைய நிகழ்ச்சிகளில் பாட வேண்டும் என ஆசைப்பட்டார். இசையில் நல்ல பயிற்சி எடுத்த ஆண்ட்ரியாவுக்கு சினிமாவில் பாட வாய்ப்புகள் கிடைத்தது.
அஸ்கி குரலில் ஆண்ட்ரியா பாடிய பாடல்கள் இளசுகளை சுண்டி இழுத்தது. ஆனால், அவரை நடிகையாக பார்த்தது இயக்குனர் கவுதம் மேனன்தான். அவர் இயக்கிய பச்சக்கிளி முத்துச்சரம் படத்தில் நடிக்க வைத்தார். அதன்பின் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து நடிகைகளில் ஒருவராக மாறினார்.
பல படங்களில் நடித்திருந்தாலும் ஆயிரத்தில் ஒருவன், வட சென்னை, அரண்மனை, அரண்மனை 3 போன்ற படங்களில் சிறப்பாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார். ஒருபக்கம் சினிமாவில் பாடுவது, நடிகைகளுக்கு பின்னனி குரல் கொடுப்பது, வெளிநாடுகளில் இசை கச்சேரி செய்வது என பிஸியாக இருந்து வருகிறார்.
மிஷ்கின் இயக்கிய பிசாசு 2 படத்தில் நடித்திருக்கிறார். ஆனால், இந்த படம் இதுவரை வெளியாகவில்லை. ஆனால், அதை பற்றியெல்லாம் கவலைப்படவில்லை. தனக்கு பிடித்த விஷயங்களை செய்து வருகிறார். இப்போது சினிமாவில் நடிப்பதை விட வெளிநாடுகளில் கச்சேரி நடத்துவதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்,
அவ்வப்போது கவர்ச்சியான ஆடைகளை அணிந்து போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை தன்பக்கம் இழுத்து வருகிறார். அந்தவகையில், கோட் அணிந்து அழகை காட்டி ஆண்ட்ரியா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை கிறுக்கு பிடிக்க வைத்திருக்கிறது.