ஓட்டு போட ஏன் வரல?!.. அரசியலுக்கு வருவீங்களா?!.. கேள்விக்கு ஜோ சொன்ன பதிலை பாருங்க!..
மும்பையிலிருந்து தமிழ் சினிமாவுக்கு திறமை காட்ட வந்த நடிகர்களில் ஜோதிகாவும் ஒருவர். க்யூட் லுக்கில் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். பொதுவாக சிம்ரன் போல கட்டழகு இருக்க வேண்டும், நடனம் ஆட தெரிய வேண்டும் என பலரும் நினைத்த நிலையில் இவை எதுவுமில்லாமல் முகபாவனைகளை காட்டியே தமிழ் சினிமாவில் பல வருடங்கள் நீடிக்க முடியும் என நிரூபித்தவர் ஜோதிகா.
பல ஹிட் படங்களில் நடித்த ஜோதிகா நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின் ராட்சசி உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். 2 குழந்தைகளுக்கு தாயான ஜோதிகா ஒரு சிறந்த அம்மாவாக குழந்தைகளை கவனித்து வருகிறார். சிவக்குமாரின் குடும்பத்தில் நல்ல மருமகளாகவும் பெயர் வாங்கியிருக்கிறார்.
இதையும் படிங்க: போனை எடுத்தா ஹலோ சொல்றது தானே முறை… என்னங்க சுந்தர்.சி இப்படியா பேசுவாரு?
கடந்த சில வருடங்களாகவே சமூக பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்து வருகிறார். ‘கோவிலை போல பள்ளிக்கூடங்களை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்’ என சொல்லி பரபரப்பை ஏற்படுத்தினார். இதனால் ஒரு குறிப்பிட்ட பிரிவினர் இவரை இப்பவும் கடுமையாக விமர்சனம் செய்வது உண்டு. ஆனால், அதையெல்லாம் ஜோதிகா கண்டுகொள்வது இல்லை. இப்போது கணவர் சூர்யாவுடனும், குழந்தைகளுடன் மும்பையில் வசித்து வருகிறார்.
இந்நிலையில், சமீபத்தில் சென்னை வந்த ஜோதிகாவிடம் பத்திரிக்கையாளர் பல கேள்விகளையும் கேட்டனர். ‘சமூக பிரச்சனைகளை பேசும் நீங்கள் ஏன் ஓட்டு போடவில்லை?’ என ஒரு செய்தியாளர் கேட்டதற்கு ‘தேர்தல் நேரத்தில் நான் வெளிநாட்டில் இருந்தேன். அதை சரியாக திட்டமிட முடியாது. ஒவ்வொரு வருடமும் ஓட்டு போட்டிருக்கிறேன். இந்த முறை முடியவில்லை’ என சொன்னார்.
இதையும் படிங்க: அட்டகாசமா?.. ஆளவிடுங்கடா சாமி ரகமா?.. அரண்மனை 4 நம்பி பார்க்க போலாமா?.. விமர்சனம் இதோ!..'
ஒரு நிருபர் ‘சமூக பிரச்சனைகளுக்கு தைரியமாக குரல் கொடுக்கும் நீங்கள் அரசியலுக்கு ஏன் வரக்கூடாது?’ என கேட்க அதற்கு பதில் சொன்ன ஜோதிகா ‘என் குழந்தைகளின் படிப்பை கவனிக்க வேண்டி இருக்கிறது. அதோடு, இப்போது அரசியலுக்கு வரும் எண்ணமும் எனக்கு இல்லை’ என பதில் சொன்னார்.
மேலும், பெண்கள் ஒரு நாளைக்கு 45 நிமிடாவது உடற்பயிற்சி செய்ய வேண்டும். அது அழகுக்காக மட்டும் இல்லை. உங்கள் ஆரோக்கியத்திற்கு அது உதவும். குடும்பத்தலைவியாக இருந்தாலும் பெண்கள் தனக்கென நேரத்தை ஒதுக்க வேண்டும்’ என சொன்னார். ‘நீங்களும் சூர்யாவும் எப்போது மீண்டும் இனைந்து நடிப்பீர்கள்?’ என கேட்டதற்கு ‘ஒரு நல்ல கதை அமைந்தால் கண்டிப்பாக இணைந்து நடிப்போம். 15 வருடங்களாக நாங்கள் இருவரும் அதற்காக காத்திருக்கிறோம்’ என சொன்னார்.