Connect with us
KRV Gemini

Cinema History

கே.ஆர்.விஜயாவை துல்லியமாக கணித்த ஜெமினிகணேசன்… ஒரே வருடத்தில் பலித்த ஆச்சரியம்!..

நடிகைகளில் நவரசம் கலந்த நடிப்பை வெளிப்படுத்துபவர் கே.ஆர்.விஜயா. இவர் பெரிய நடிகையாக வருவார் என ஜெமினிகணேசன் சொன்னாராம். அதே போல நடந்தது என்று கே.ஆர்.விஜயா தெரிவித்துள்ளார். காதல் மன்னன் ஜெமினிகணேசனுக்கு இது நூற்றாண்டு பிறந்தநாள். அதைக் கொண்டாடும் விதமாக சமீபத்தில் அவரது மகள் டாக்டர் கமலா செல்வராஜ் அவருடன் நடித்த பிரபலங்களின் கருத்துகளை ஒவ்வொன்றாகப் பதிவிட்டுள்ளார்.

அந்தப் பதில் ஒன்று தான் நடிகை கே.ஆர்.விஜயா ஜெமினிகணேசனைப் பற்றி சொன்னது. என்ன சொன்னார் என்று பார்க்கலாம்.

அப்போது தான் முதன்முதலில் கே.ஆர்.விஜயாவின் டான்ஸ் புரோகிராம் நடந்ததாம். அதற்கு தலைமை தாங்க ஜெமினிகணேசன் வந்தாராம். அப்போது தான் கே.ஆர்.விஜயாவும் முதல் தடவையாக ஜெமினிகணேசனைப் பார்த்தாராம். அப்போது கே.ஆர்.விஜயாவைப் பற்றி ஜெமினிகணேசன் இந்தப் பொண்ணு நல்லா ஆடினாள் என்றும் எதிர்காலத்தில் நல்லா வருவாள் என்றும் பெரிய நடிகையாக வருவாள் என்றும் ஆசீர்வதித்தாராம்.

அப்படி அவர் சொல்லி ஒரு வருடம் தான் இருக்குமாம். அவர் சொன்னபடியே நடந்து விட்டதாம். அப்போது அவருடனே சேர்ந்து நடிக்கும் வாய்ப்பையும் பெற்றாராம் கே.ஆர்.விஜயா. அந்தப் படம் தான் கற்பகம். அதை என்னால் மறக்கவே முடியாது. அவர் சொன்னது உண்மையாகவே பலித்துவிட்டது என்று கே.ஆர்.விஜயா தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல், அந்தப் படத்தில் சாவித்திரி, ரங்கராவ் என பெரிய நடிகர், நடிகைகளுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது எனவும் அந்தப்படத்தில் நடித்ததிலேயே அவர் தான் சின்னப்பொண்ணு என்றும் அந்த கற்பகம் கேரக்டரில் நடித்ததாகவும் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார் கே.ஆர்.விஜயா.

அப்போது ஆயிரம் இரவுகள் வருவதுண்டு என்ற பாடலில் தலையை அழுத்தி சீவி இருந்தாராம் கே.ஆர்.விஜயா.

அழுத்தி சீவாமல் கொஞ்சம் காது மறைக்கிற மாதிரி சீவினா நல்லாருக்கும் என்ற அறிவுரை சொன்னார்களாம் ஜெமினிகணேசனும், சாவித்திரியும். அதே போல சின்னஞ்சிறு உலகம் படத்தில் ஜெமினி கணேசனுக்கு தங்கையாக நடித்தாராம். அதையும் மறக்கவே முடியாது என்று தெரிவித்துள்ளார்.

அதே போல, சரஸ்வதி சபதம் படத்தில் ரொம்பவே வித்தியாசமான கேரக்டராம். இருவரும் போட்டி போட்டுக்கொண்டு நடித்தார்களாம். அந்தப்படம் தான் அவரது வாழ்க்கையில் முக்கியமான படிக்கட்டு என்றும் தெரிவித்துள்ளார் கே.ஆர்.விஜயா.

google news
Continue Reading

More in Cinema History

To Top