Categories: latest news

குஷ்பூ வீட்டில் இருக்கும் ஒரே ஒரு புகைப்படம்! அட இந்த நடிகரா? அப்போ பிரபு?

Actress Kushboo: நடிகர்கள்தான் ஒரு குறிப்பிட்ட காலம் வரை சினிமாவில் நடித்து அதன் பிறகு அரசியலுக்கு வருவதை பார்த்திருக்கிறோம். அதில் ஜெயலலிதா முதன் முதலில் ஒரு பெண்ணாக இருந்து நடிகை அரசியல்வாதி என துணிச்சலின் அடையாளமாக இந்த சமூகத்தில் அடையாளம் காணப்பட்டார். அதிலிருந்து ஒரு சில நடிகைகளும் சினிமாவிற்கு பிறகு அரசியலில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர்.

அந்த வகையில் நடிகை குஷ்பூ இப்போது அரசியலில் தீவிரமாக இருந்து வருகிறார். முழு நேர அரசியல்வாதியாகவே பலருக்கும் ஒரு துணிச்சலின் அடையாளமாக இன்று குஷ்பூ திகழ்ந்து வருகிறார். தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை சினிமா என எந்த பிரச்சினை வந்தாலும் இறங்கி அடிக்கும் தைரியம் கொண்டவர் குஷ்பூ.

இதையும் படிங்க: வாய்ப்புக்காக இப்படி ஓபனா இறங்குவீங்க? நயன்தாரா டிரெஸால் கழுவி ஊற்றும் ரசிகர்கள்!..

தமிழில்  ‘வருஷம் 16’ என்ற படத்தின் மூலம் அறிமுகமான குஷ்பூ குழந்தை நட்சத்திரமாக ஹிந்தியில் தன்னுடைய சினிமா பயணத்தை ஆரம்பித்தார். தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த குஷ்பூ ரஜினி, கமல், கார்த்திக், பிரபு, சத்யராஜ் என அனைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடி சேர்ந்து தனக்கென ஒரு தனி இடம் பிடித்தார்.

முதன் முதலில் ரஜினி போன்ற உச்ச நட்சத்திரம் ஒருவரின் படத்தில் கதாநாயகியின் பெயரில் ஒரு பாட்டு அமைகிறது என்றால் அது குஷ்பூவுக்கு மட்டும்தான். அண்ணாமலை படத்தில் கொண்டையில் தாழம்பூ என்ற பாடல் இப்போது வரை ரசிகர்களின் ஹிட் லிஸ்டில் அமைந்த பாடலாகவே இருந்து வருகிறது. 90களில் இப்போதைய லேடி சூப்பர் ஸ்டார் என்ற பெயர் எந்த அளவுக்கு கொடிகட்டி பறக்கிறதோ அதைப்போல 90களில் ஒரு லேடி சூப்பர் ஸ்டார் ஆகவே இருந்தவர் குஷ்பூ.

இதையும் படிங்க: சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த வெள்ளி விழா படங்கள்… வருடக்கணக்கில் ஓடிய சந்திரமுகி..

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என எல்லா மொழிகளிலும் பிசியான நடிகையாகவே வலம் வந்தார். ஒரு நடிகை பிரபலமாகி அதுவும் அழகாக இருந்துவிட்டால் அவரைச் சுற்றி பல வதந்திகளும் சர்ச்சைகளும் தொடர்ந்து கொண்டு தான் வரும். அதைப்போல குஷ்பூவை பற்றியும் பல செய்திகள் அந்த நேரத்தில் உலா வந்தன.

karthick

நடிகர் பிரபுவை குஷ்பூ காதலித்து வந்ததாகவும் ஆனால் அவர்கள் திருமணத்திற்கு பிரபு வீட்டில் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் பல செய்திகள் உலா வந்தன. ஆனால் அதையெல்லாம் தாண்டி இன்று குஷ்பூ இயக்குனரும் நடிகருமான சுந்தர் சியை காதலித்து திருமணம் செய்து கொண்டு இரு மகள்களுக்கு அம்மாவாகவும் தன்னுடைய வாழ்க்கையை சிறப்பாக கொண்டு செலுத்தி வருகிறார்.

இதையும் படிங்க: சிவாஜி – விஜயகாந்த் இணைந்து நடிக்கவிருந்த படம்.. ஆனா நடிச்சது அந்த ஹீரோ!.. ஜஸ்ட் மிஸ்!…

இந்நிலையில் குஷ்புவின் வீட்டில் இருக்கும் ஒரே ஒரு புகைப்படம் நடிகர் கார்த்திக்கின் புகைப்படம் என்ற ஒரு செய்தி இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது. இதற்கு பதிலளிக்கும் விதமாக சித்ரா லட்சுமணன்   ‘ஒரு பழைய பேட்டியில் குஷ்பூவே தன்னுடைய வீட்டில் இருக்கும் ஒரே ஒரு புகைப்படம் கார்த்திக்கின் புகைப்படம் தான்’ என்று கூறியிருப்பதாக சித்ரா லட்சுமணன் அவருடைய யூடியூப் சேனல் மூலமாக தெரிவித்திருக்கிறார்.

Rohini

Recent Posts

மீண்டும் மிரட்ட வரும் அருள்நிதி: முடிவடைந்த டிமான்ட்டி காலனி 3 படப்பிடிப்பு!

தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…

5 hours ago

தனுஷின் கர-வை தொடர்ந்து பரீட் – பாடகராக பிஸியாகும் அருண் காமராஜ்

தனுஷின் 'கர' படத்தைத் தொடர்ந்து, '8 தோட்டாக்கள்' புகழ் நடிகர் வெற்றி நடிக்கும் பரீட் படத்திற்காக, அதிரடியான ஒரு போலீஸ்…

6 hours ago

நாளை வெளியாகும் பிரதீப் ரங்கநாதனின் எல்ஐகே டிரைலர் !

லவ் டுடே, டிராகன், ட்யூட் வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே வருகிற 10ம் தேதி…

6 hours ago

சிம்புவுடன் பஞ்சாயத்து!.. அரசன் படத்தை நிறுத்திய ஐசரி கணேஷ்.. முடிஞ்ச்!..

சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…

7 hours ago

சன் டிவி சீரியல்களுக்கு டஃப் கொடுக்கும் விஜய் சீரியல்கள்… இந்த வார டிஆர்பியில் இதை நோட் செஞ்சீங்களா?

Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…

13 hours ago

கோலிவுட் டூ சின்னத்திரை!… பாண்டியன் ஸ்டோர்ஸ்2 சீரியலில் இனி சிலம்பரசன்?

Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…

14 hours ago