தா.செ.ஞானவேல் தா.செ.ஞானவேல் சூர்யா நடித்துள்ள திரைப்படம் ஜெய்பீம். இந்த திரைப்படத்தை சூர்யாவின் 2D எண்டெர்டைன்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. ஷான் ரோல்டன் இசையமைத்துள்ள இப்படத்தில் பிரபல மலையாள நடிகை லிஜோமல் ஜோஸ் முக்கிய ரோலில் நடித்திருக்கிறார். அவரின் கதாபாத்திரத்தை வைத்து தான் கதை நகர்கிறது.
உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் இந்தப் படம் பழங்குடியினத் தம்பதியரான செங்கேணி மற்றும் ராஜகண்ணு ஆகியோரின் வாழ்வியலை எடுத்துரைக்கிறது. கணவன் மனைவி பாசத்துடன் வாழ்ந்து வரும் நேரத்தில் ராஜகண்ணு போலீஸாரால் பொய் வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு காவல் நிலையத்தில் இருந்து காணாமல் போக அவரது மனைவி செங்கேணி தன் கணவனைத் தேடத் வழக்கறிஞரான சந்துருவின் (சூர்யா) உதவியை நாடுகிறாள்.

இதையும் படியுங்கள்:இதுக்கு ஒரு நியாயம் சொல்லுங்க சூர்யா சார்… ஜமாய்க்க வைத்த ஜெய்பீம் நடிகை!
இப்படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி மிகப்பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் வ்ருகிற நவம்பர் 2ம் தேதி படம் அமேசானில் வெளியாகிறது. இந்நிலையில் தற்போது சொல்லவரும் தகவல் என்னவென்றால் இப்படத்தில் நடித்துள்ள நடிகை லிஜோமல் ஜோஸ் படத்தில் மலைவாழ் பெண்மணியாக மிகவும் ஏழ்மையான தோற்றத்தில் நடித்து அசத்தியிருந்தார். அதற்கு அப்படியே மாறாக தற்போது அல்டரா மாடர்ன் உடையில் போஸ் கொடுத்து அவரா இவர் என வியக்கவைத்துள்ளார். இதனை கண்ட சில நக்கல் பிடித்த நெட்டிசன்ஸ் இதுக்கு ஒரு நியாயம் சொல்லுங்க சூர்யா சார்… என நடிகையை ட்ரோல் செய்து வருகின்றனர்.





