Connect with us

Cinema History

நடுக்காட்டில் சிக்கிய நடிகையர் திலகம்!.. ஆனாலும் அசால்டாக கெத்து காட்டிய சாவித்ரி..

ஆந்திராவை சேர்ந்தவர் சாவித்ரி. இவர் 6 மாத குழந்தையாக இருக்கும்போதே அவரின் தந்தை மரணமடைந்துவிட வளர்ந்தது எல்லாம் உறவினர் வீட்டில்தான். சிறு வயது முதலே நடனம் மற்றும் நடிப்பின் மீது ஆர்வம் ஏற்பட்டது. எனவே, நாடகங்களில் நடிக்க துவங்கினார்.

தமிழ் சினிமாவில் நடிக்க வேண்டும் என்கிற ஆசையில் உறவினருடன் சென்னை வந்து வாய்ப்பு தேடினார். ஒருவழியாக மிஸியம்மா என்கிற படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்த படத்திலிருந்து பானுமதி விலகிவிட அந்த வாய்ப்பு அந்த வாய்ப்பு சாவித்ரிக்கு வந்தது. அதை சரியாக பயன்படுத்திக்கொண்டு சிறப்பாக நடித்தார் சாவித்ரி.

இதையும் படிங்க: ஜெமினி கணேசன் வந்தாதான் நான் நடிப்பேன்!.. படப்பிடிப்பில் அடம்பிடித்த சாவித்ரி!.. இப்படி ஒரு லவ்வா!..

அதன்பின் பல படங்கள். நடிகர் ஜெமினி கணேசனுடனுக்கு ஜோடியாக பல படங்களில் நடித்தார். சிவாஜியை எப்படி நடிகர் திலகம் என அழைத்தார்களோ அப்படி சாவித்ரியை ‘நடிகையர் திலகம்’ என அழைத்தார்கள். அந்த அளவுக்கு ஒரு சிறந்த நடிகையாக விளங்கினார். பாலும் பழமும் படத்தில் சிவாஜிக்கு தங்கையாக அவர் காட்டிய நடிப்பு ரசிகர்களை கட்டிப்போட்டது.

Savitri

Savitri

சிறந்த நடிகைக்கான விருதை பலமுறை வாங்கி இருக்கிறார். ஜெமினி கணேசனை திருமணம் செய்து கொண்ட சாவித்ரி ஒருகட்டத்தில் அவரிடமிருந்து விலகி வாழ்ந்தார். சரியான வாய்ப்புகள் இல்லாமல், சொந்த படம் எடுத்து நஷ்டமடைந்து சொத்துக்களை விற்று கடனாளி ஆகி மதுப்பழக்கத்திற்கும் ஆளானார். இதனால் உடல் நலம் பாதிக்கப்பட்டு 1981ம் வருடம் தனது 47வது வயதில் மரணமடைந்தார். தமிழ் திரையுலகில் சாவித்ரி பதித்துவிட்டு சென்ற தடம் இன்னும் பல வருடங்கள் இருக்கும்.

இதையும் படிங்க: அப்பா எனக்கு என்னவெல்லாம் செய்தார் தெரியுமா?… ஜெமினி கணேசன் பற்றி பேசும் சாவித்ரி மகன்…

எம்.ஜி.ஆரை போலவே தன்னிடம் இருந்ததை பலருக்கும் சாவித்ரி வாரி வழங்கி இருக்கிறார் என்பது பலருக்கும் தெரியாது. ஏனெனில், அது தொடர்பான செய்திகள் வெளியே வரவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஒருமுறை படப்பிடிப்புக்காக இரவு நேரத்தில் மைசூரின் ஒரு காட்டுப்பகுதியில் படப்பிடிப்பு குழுவினருடன் காட்டு பகுதியில் சென்று கொண்டிருந்தார் சாவித்ரி.

அப்போது காட்டு யானைகள் அவர்களின் வாகனங்களை வழி மறித்தன. எனவே, காரை பின்னால் ஓட்டி சென்று தப்பித்தனர். அப்போதுதான் அங்கு வேறொரு ஆபத்து காத்திருந்தது. கொள்ளையர்கள் அவர்களை சூழ்ந்து கொண்டனர். உடனே, ‘யாரும் பயப்பட வேண்டாம்’ என சொல்லிவிட்டு காரிலிருந்து இறங்கிய சாவித்ரி ‘நான் ஒரு நடிகை. படப்பிடிப்புக்காக போய் கொண்டிருக்கிறேன். இப்போது எங்களிடம் 5 ஆயிரம் மட்டுமே இருக்கிறது’ என சொல்லி அந்த பணத்தை அவர்களிடம் கொடுத்தார்.

அப்போது யானை பிரச்சனையை புரிந்து கொண்ட கொள்ளையர்கள் பல கிலோ மீட்டர்கள் படப்பிடிப்பு வாகனங்களுக்கு துணையாக வந்து பாதுகாப்பு கொடுத்திருக்கிறார்கள்.

google news
Continue Reading

More in Cinema History

To Top