Connect with us

Cinema History

கவர்ச்சி ராணி சில்க் கடிச்ச ஆப்பிள் எவ்வளவு ரூபாய்க்கு ஏலம் போனதுன்னு தெரியுமா?

தமிழ்சினிமாவின் கவர்ச்சி ராணி சில்க் ஸ்மிதா என்பது நம் அனைவருக்கும் தெரியும். அவரது பெயரைக் கேட்டதுமே ரசிகர்களுக்கு ஒரு கிக் ஏற்படும். அந்த பெயரிலேயே போதை வந்துவிடுகிறது. அப்படி என்றால் அவரது நடிப்பு எப்படிப்பட்ட போதையைத் தரும்.

சுண்டியிழுக்கும் கண்கள் தான் சில்க் ஸ்மிதாவின் வசீகரத்துக்கு உறுதுணையாக உள்ளன. அடுத்து அவரது நயமான பேச்சு. நளினமான பாவனை. இவற்றோடு அவர் பாடலுக்கு போடும் ஆட்டம் என்று சொல்லிக் கொண்டே போகலாம். அது சரி. சில்க் ஸ்மிதா திரையுலகிற்குள் எப்படி நுழைந்தார் என்று தெரியுமா?

silk2

ஒரு ஸ்டூடியோ வாசலில் இருந்த மாவரைக்கும் ரைஸ் மில்லுக்கு வந்தவர் தான் சில்க். இயற்பெயர் விஜயலட்சுமி. அவரைப் பார்த்ததும் வினுசக்கரவர்த்தி அழைத்துப் பேசினார்.

சினிமாவில் நடிப்பதற்குரிய அத்தனைத் தகுதிகளும் அவரிடம் பளிச்சிட்டன. நடிகர் வினுசக்கரவர்த்தியையும் இந்த அம்சங்கள் கவரவே அவர் சினிமாவில் அறிமுகப்படுத்தினார். அந்த நன்றியை சில்க் எப்போதுமே மறந்ததில்லை.

திரையுலகில் பெரிய பெரிய ஜாம்பவான்களும், டைரக்டர்களும் நடிகர் திலகம் சிவாஜிகணேசன் வந்தாலே பணிந்து பயந்து நடுங்குவர்.

அவர் வரும்போதே செட்டில் உள்ள அனைவரும் எழுந்து விடுவர். அவ்வளவு பேரும் எழுந்து நின்றாலும் சில்க் மட்டும் கால் மேல் கால் போட்டு அமர்ந்து இருப்பார். அவ்வளவு கெத்து என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

அப்போது கதாநாயகி, கதாநாயகர்களை விட அதிகமாக ரசிகர்களைக் கவர்ந்து இழுத்தவர் சில்க். அதிக சம்பளத்துக்காகப் பேசப்பட்டவரும் அவர் தான்.

ஒரே நேரத்தில் ரஜினி, கமல் என இருபெரும் ஜாம்பவான்களுடன் ஜோடி சேர்ந்தவர் சில்க். அவருக்காக ரசிகர்கள் மட்டுமா காத்திருந்தனர்? அவரது கால்ஷீட்டுக்காகப் பெரிய பெரிய நடிகர்களும், இயக்குனர்களும் கூட காத்திருந்தனர்.

Alaigal oyvathillai Silk

அவர் கடித்த ஆப்பிள் அந்தக் காலத்திலேயே 100 ரூபாய்க்கு ஏலம் போனதாம். இவர் நடித்த படங்களில் எல்லாமே கவர்ச்சி அலைகள் ஓய்வதில்லை. அந்த அளவு டூ பீஸ் உடைகள் இவரது உடற்கட்டை எடுப்பாகக் காட்டி அசரடித்தன.

ஆனால் இவர் நடித்த அலைகள் ஓய்வதில்லை படத்தில் முற்றிலும் மாறுபட்ட கேரக்டரில் குடும்பப்பாங்கான பெண்ணாக வந்து சேலை கட்டி கேரக்டருடன் ஒன்றிப் போய் நடித்து தாய்க்குலங்களின் மனதில் போற்றப்பட்டார் சில்க்.

சினிமாவில் இவர் காசுக்காக நடித்தார். ஆனால் சொந்த வாழ்க்கையில் இவருக்கு இருந்த சோகம் யாருக்கும் தெரியாது.

மனதுக்குள்ளேயே எல்லாவற்றையும் வைத்துக் கொண்டு யாரிடமும் தனது சோகத்தை வெளிக்காட்டாமலேயே கடைசி வரை இருந்து விட்டார். தாடிக்காரர் ஒருவருடன் கிசுகிசு வந்தது. ஆனால் அவரைப் பற்றியும் சில்க் எவ்வித கருத்துகளும் சொல்லவில்லை.

நிஜவாழ்க்கையில் பக்தியில் சிறந்து விளங்கி ஒழுக்கத்துடன் வாழ்ந்து வந்தார் சில்க் என்பது பலருக்கும் தெரியாத விஷயம். தனது 35வது வயதில் இந்த உலகை விட்டு அவர் மறைந்தது தமிழ்த்திரை உலகுக்கு பேரிழப்பு என்றே சொல்ல வேண்டும்.

google news
Continue Reading

More in Cinema History

To Top