24 வருஷம் கழிச்சு மீண்டும் விஜயுடன் இணையும் நடிகை! வைரலாகும் தளபதி 69 அப்டேட்
Thalapathy 69:
விஜயின் நடிப்பில் சமீபத்தில் ரிலீஸான கோட் திரைப்படம் ரசிகர்களின் பேராதரவை பெற்று வருகின்றன. கோடிக்கணக்கில் வசூலை அள்ளி வரும் கோட் திரைப்படத்தை பார்க்க இன்னும் மக்கள் கூட்டம் கூட்டமாக செல்வதை பார்க்க முடிகின்றது. லியோ படத்திற்கு எத்தனையோ ட்ரோல்கள் வந்தன. அந்தளவுக்கு கோட் படத்திற்கு வரவில்லை. எல்லா தரப்பு ரசிகர்களும் கோட் படத்தை கொண்டாடி வருகின்றனர்.
படம் ஆரம்பத்திலேயே டைட்டில் கார்டில் எல்லா ரசிகர்களுக்கும் நன்றி என்றுதான் போட்டிருப்பார்கள். இது வெங்கட் பிரபு கையாண்ட யுத்தி என்று கூட சொல்லலாம். இந்த நிலையில் விஜய் தனது அடுத்த படத்திற்கான வேலைகளில் இறங்க இருக்கிறார். அவருடைய 69வது படத்தை எச்.வினோத் இயக்கப் போவதாக தகவல்கள் வெளி வந்து கொண்டிருக்கின்றன.
இதையும் படிங்க: ஈஸ்வரிதான் என்னோட எதிரி… அலறும் மனோஜ்.. பாண்டியனை சமாதானம் செய்த மீனா!..
எச்.வினோத்தும் முன்பு ஒரு பேட்டியில் விஜயை வைத்து எடுப்பதாக இருந்தால் கண்டிப்பாக பொலிட்டிக்கல் சம்பந்தமுள்ள கதையாகத்தான் எடுப்பேன் என்று கூறியிருந்தார். அதனால் தளபதி 69 படத்தை ஒரு வேளை எச்.வினோத் இயக்கினால் அந்தப் படம் கண்டிப்பாக அரசியல் கதையை மையமாக கொண்ட படமாகத்தான் இருக்கும்.
இந்த நிலையில் தளபதி 69 படத்தை பற்றி ஒரு அப்டேட் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. ஏற்கனவே இந்தப் படத்தில் சமந்தா நடிப்பதாக கூறப்பட்டது. அதனால் சமந்தா லீடு ரோலில் விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார் என்றும் சிம்ரன் இந்தப் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது.
இதையும் படிங்க:ஏகே-ன்னு கூப்பிடுங்க!. அஜித் சொன்னதுக்கு பின்னாடி இருப்பது ஜோதிடமா?!.. லீக்கான அப்டேட்!…
அப்படி நடித்தால் 24 வருஷம் இந்த ஜோடி மீண்டும் திரையில் ஜொலிப்பார்கள் என்றும் சொல்லப்படுகிறது. மேலும் இவர்களுடன் இணைந்து மலையாள நடிகை மமிதா பைஜுவும் நடிப்பதாக சொல்லப்படுகிறது.
அதுமட்டுமில்லாமல் தெறி படத்தை போன்ற கதையம்சம் கொண்ட படமாகக் கூட தளபதி 69 திரைப்படம் இருக்கும் என்று கூறப்படுகிறது. இன்னும் சில தினங்களில் தளபதி 69 படத்தை பற்றிய அதிகாரப்பூர்வ அப்டேட் வெளியாகும் . அதுவரை பொறுத்திருந்து பார்ப்போம்.
இதையும் படிங்க: காலை வாரிய கேரளா, ஆந்திரா, கர்நாடகா!. வசூலை பெறாத கோட் அப்செட் ஆன விஜய்!..