கங்குவா தோல்விக்குப் பிறகும் சிறுத்தை சிவாவுக்கு கை கொடுத்த தனுஷ்!..

X
கங்குவா தோல்விக்குப் பிறகும் சிறுத்தை சிவாவுக்கு கை கொடுத்த தனுஷ்!..

நடிகர் தனுஷ் தற்போது லப்பர் பந்து இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கும் D56 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் எஸ்.ஜே. சூர்யா, வடிவேலு, ப்ரீத்தி முகுந்தன், விஜய் குமார் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். சாய் அபயங்கர் இசையமைக்கும் இப்படம் 2027ல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

D56 படத்தை தொடர்ந்து தனுஷ் நடிக்கும் அடுத்த திரைப்படம் D57. இப்படத்தை சிறுத்தை சிவா இயக்க இருப்பதாக கூறப்படுகிறது. தனுஷின் தயாரிப்பு நிறுவனமான வண்டர்பார் ஃபிலிம்ஸ் இப்படத்தை தயாரிக்க உள்ளதாகவும், ஒளிப்பதிவாளராக ஓம் பிரகாஷ் இணைய இருப்பதாகவும் கூறப்படுகிறது.

D57 படத்தின் படப்பிடிப்பு வரும் டிசம்பர் அல்லது 2027 ஜனவரி மாதத்தில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே, தனுஷின் ஓம் திரைப்படமும் அக்டோபர் 16ஆம் தேதி வெளியாக உள்ளது. மேலும், 72வது தேசிய திரைப்பட விருதுகளில் தனுஷ் இரண்டு விருதுகள் வென்று கவனம் பெற்றுள்ளார்.

மாரி செல்வராஜ் படம் என்ன ஆனது என்றும் தனுஷ் – வெற்றிமாறன் கூட்டணியில் தமிழ் முருகன் வெளியாகும் என அறிவிப்பு வெளியானதே அந்த படம் எப்போது தொடங்கும் என ஏகப்பட்ட கேள்விகள் கிளம்பி உள்ளன.

இளையராஜா பயோபிக்கை தொடர்ந்து அப்துல் கலாம் பயோபிக் படத்தையும் தனுஷ் டிராப் செய்து விட்டாரா என்றும் கங்குவா தோல்விக்குப் பிறகு சிறுத்தை சிவாவுடன் இணைவது ஏன் என்றும் தனுஷ் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.