மட்ட சாங்க அஜித்கிட்ட காட்டுனதும்.. தல ரியாக்ஷன் குறித்து வெங்கட் பிரபு
Vijay Ajith:விஜய் நடிப்பில் அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் திரைப்படம் கோட். வரும் ஐந்தாம் தேதி உலகெங்கிலும் இந்த படம் ரிலீஸ் ஆக காத்துக் கொண்டிருக்கின்றது. வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் திரைப்படம் பெரிய அளவில் ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருக்கிறார். படத்தில் விஜய்யுடன் இணைந்து சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, பிரசாந்த், பிரபுதேவா, மோகன், அஜ்மல், யோகி பாபு, பிரேம்ஜி, வைபவ் போன்ற பல நடிகர்கள் நடித்திருக்கின்றனர்.
ஒரு மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடிக்க ஒட்டுமொத்த ரசிகர்களின் எதிர்பார்ப்பை இந்த படம் பூர்த்தி செய்யுமா என்பதை இன்னும் சில தினங்களில் நாம் பார்க்க இருக்கிறோம். இந்த நிலையில் படத்தை பற்றி வெங்கட் பிரபு அவருடைய அனுபவத்தையும் சில சுவாரஸ்யமான தகவல்களையும் அவ்வப்போது பேட்டிகளில் கூறி வருகிறார்.
இதையும் படிங்க: ஸ்ரீதேவியோட ஏன் நடிக்கல?… நக்கலாக பேசிய பாலகிருஷ்ணா
அது மட்டுமல்லாமல் பிரபல சினிமா தயாரிப்பாளர் டி சிவா கோட் படத்தில் ஒரு முக்கியமான கேரக்டரில் நடித்திருக்கிறார். அவரும் ஒரு பேட்டியில் கூறும்போது யாரும் எதிர்பாராத ஒரு சர்ப்ரைஸ் இந்த படத்தில் இருக்கிறது. யாருமே அதை எதிர்பார்த்து இருக்க மாட்டீர்கள் .அப்படி ஒரு சர்ப்ரைஸ் இந்த படத்தில் இருக்கிறது எனக் கூறி ஒரு பெரிய ஹைப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.
அதுபோக விஜயகாந்தின் ஏஐ தொழில்நுட்பமும் இதில் பயன்படுத்தி இருப்பதால் படம் கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில் வெங்கட் பிரபு ஒரு பேட்டியில் கூறும்போது கோட் படத்தில் அமைந்த மட்ட சாங் பாடலை அஜித்திடம் காட்டியதாக கூறியிருக்கிறார். அஜர்பைஜானில் இருக்கும் அஜித்தை வெங்கட் பிரபு போய் சந்தித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது.
இதையும் படிங்க: Pushpa 2: ஆத்தீ! ஓடிடி மட்டும் இம்புட்டு கோடியா?
அப்போது அஜித் வெங்கட் பிரபுவிடம் ஏதாவது சாங் இருக்கிறதா எனக் கேட்க வெங்கட் பிரபு மட்ட சாங்கை போட்டு காட்டினாராம். அதை பார்த்ததும் அஜித் ‘டேய் சூப்பர்டா. எனக் கூறி அருகில் இருந்த திரிஷா உள்பட சில பேரை அழைத்து இந்த பாடலை காட்டி சந்தோஷப்பட்டாராம் அஜித்.
அதே மாதிரி அஜித்தை சந்தித்து விட்டு கோட் படப்பிடிப்பிற்கு வரும்போது விஜய் வெங்கட் பிரபுவிடம் ‘என்ன அஜர்பைஜானில் ஒரே ஜாலியா’ என கேட்டாராம். உடனே அஜித்திடம் மட்ட சாங் பாடலை காட்டிய விஷயத்தை சொன்னாராம். அதற்கு விஜயும் சந்தோஷப்பட்டாராம்.
இதையும் படிங்க: இதுக்குத்தான் ‘வாழை’ய விழுந்து, விழுந்து பாராட்டினீங்களா?
அதுமட்டுமல்லாமல் மட்ட சாங்கை அஜித்திடம் வெங்கட் பிரபு காட்டியதும் பதிலுக்கு அஜித் குட் பேட் அக்லி படத்தின் பாடலை வெங்கட் பிரபுவிடம் காட்டினாராம். இப்படி அஜித் விஜய் இவர்களுக்குள் ஒருவித புரிதல் ஆரம்பத்திலிருந்து இப்போது வரை இருந்து கொண்டே தான் இருக்கின்றது என வெங்கட் பிரபு கூறினார்.