வட போச்சே!... பல கோடி பட்ஜெட்... ரஜினி பட வாய்ப்பை இழந்த இளம் இயக்குனர்...

நடிகர் ரஜினிகாந்த் தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கி வரும் ‘அண்ணாத்த’ படத்தில் நடித்து முடித்துள்ளார்.
இப்படத்திற்கு பின் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தை இயக்கி கவனம் ஈர்த்த தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் ரஜினி நடிக்கவிருப்பதாகவும், இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக நீண்டநாட்களாகவே செய்திகள் வெளியானது.
தற்போது அது டிராப் ஆகிவிட்டதாக கூறப்படுகிறது.அதோடு, ரஜினி 3 இயக்குனர்களிடம் கதை கேட்டு ஓகே செய்துள்ளார். அவர்கள் கூறிய கதைகளில் ஏதோ ஒன்றில் ரஜினி நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: அவருக்கா இந்த நிலமை?.. சீரியலில் நடிக்கப்போன விஜய் பட நடிகை..
‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்திற்கு பின் வேறு எந்த படத்தையும் தேசிங்கு பெரியசாமி நடிக்கவில்லை. ரஜினிக்காக கதை தயார் செய்து காத்திருந்தார். ரஜினிக்கு சம்பளம் ரூ.100 கோடி, பட்ஜெட் ரூ.50 கோடி, படத்தின் வியாபாரம் 250 கோடி. ரூ.100 லாபம் என கணக்கு போட்டது. ஏஜிஎஸ் நிறுவனம்.
ஆனால், தேசிங்கு பெரியசாமி ரஜினிக்கு தயார் செய்து வைத்திருந்த கதையில் ஒரு பிளாஷ் பேக் காட்சி உள்ளது. அது பொன்னியின் செல்வன் போல ஒரு சரித்திர கதையாகும். இதற்கு மட்டும் பல கோடி பட்ஜெட் ஆகுமாம். அதாவது படத்தின் பட்ஜெட்டே ரூ.250 கோடியை தொடுமாம்.
இதையும் படிங்க: அசிங்கப்பட்டேன்…அதனால் வெளியேறினேன்….உண்மையை உடைத்த சீரியல் நடிகர்….
எனவேதான், ஏஜிஎஸ் நிறுவனம் இப்படத்திலிருந்து பின் வாங்கிவிட்டதாக கூறப்படுகிறது. மேலும், அதுபோன்ற காட்சிகளில் நடிக்கும் வகையில் ரஜினியின் உடல் நிலையும் இல்லை. எனவே, ரஜினியுன் இப்படத்தில் நடிக்க யோசிக்கிறார்.
சரித்திரக்கதை, பெரிய பட்ஜெட் என்றெல்லாம் செல்லாமல் ரஜினிக்கு அழகாக ஒரு கதையை தேசிங்கு பெரியசாமி உருவாக்கியிருந்தால் அடுத்த ரஜினி படத்தின் இயக்குனராக அவர் இருந்திருப்பார். ஆனால், தற்போது அந்த வாய்ப்பை அவர் இழந்து விட்டார்.
தற்போது வட போச்சே என்கிற மன நிலையில் இருக்கிறாராம் தேசிங்கு பெரியசாமி..