கொலவெறி பாட்டுதான் படத்தையே காலி பண்ணிச்சி!. ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஆதங்கம்!...

by சிவா |   ( Updated:2024-02-12 05:29:12  )
dhanush
X

Aishwarya rajini: ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா. தனுஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தனுஷின் அண்ணன் செல்வராகவனிடம் சில படங்களில் உதவி இயக்குனராக வேலை செய்தார். எனவே, இயக்கத்தில் அதிக ஆர்வம் ஏற்பட்டது. கணவர் தனுஷையே வைத்து அவர் இயக்கிய முதல் படம் 3.

இந்த படத்தில் கமலின் மகள் ஸ்ருதிஹாசன் கதாநாயகியாக நடித்திருந்தார். இந்த படத்தில் தனுஷின் நண்பனாக சிவகார்த்திகேயன் நடிக்க, அனிருத் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். இந்த படம் உருவாவதற்கு முன்பே தனுஷும், அனிருத்தும் இணைந்து ‘ஒய் திஸ் கொலவெறி’ ஆல்பத்தை உருவாக்கினார்கள். இந்த ஆல்பம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது.

இதையும் படிங்க: விஜய்யோட ஒவ்வொரு மூவும் அந்த கட்சிக்குத்தான் ஆப்பு?.. சீமான் என்ன சொன்னார் தெரியுமா?

உலகத்தின் பல பகுதிகளிலும் இந்த பாடலுக்கு பலரும் நடனம் ஆடிய வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. எனவே, இந்த பாடலை '3' படத்திலும் வைத்தார்கள். ஆனால், கொலவெறி பாடல் ஹிட் அடித்த அளவுக்கு அந்த படம் ஹிட் அடிக்கவில்லை. இந்த படம் 2012ம் வருடம் வெளியானது.

அதன்பின் 3 வருடங்கள் கழித்து கவுதம் கார்த்திக்கை வைத்து 'வை ராஜா வை' படத்தை இயக்கினார் ஐஸ்வர்யா. அந்த படமும் பெரிய லெவலுக்கு போகவில்லை. அதன்பின் 9 வருடங்கள் கழித்து இப்போது லால் சலாம் படத்தை இயக்கியிருக்கிறார். விஷ்ணு விஷால், விக்ராந்த் மற்றும் ரஜினி கெஸ்ட் ரோலில் நடித்திருந்த இந்த படம் கடந்த 9ம் தேதி வெளியானது.

இதையும் படிங்க: சிவாஜி படத்தில் நடிக்க வந்த வாய்ப்பு!. முடியாம போச்சி!.. இப்ப வரைக்கும் ஃபீல் பண்ணும் நடிகை…

படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்து வருகிறது. இந்நிலையில், ஊடகம் ஒன்றில் பேசிய ஐஸ்வர்யா ‘ஒய் திஸ் கொலவெறி பாடல் பெரிய ஹிட் ஆன நிலையில் 3 படம் உருவானது. ஆனால், அந்த பாடல் படத்தின் வெற்றிக்கு எந்தவகையிலும் உதவவில்லை.

3 movie

அந்த பாடல் சொன்னது வேறு. நாங்கள் கதையில் சொன்னது சீரியஸான விஷயம். அந்த சீரியஸை அந்த பாடல் கெடுத்துவிட்டது. அந்த பாடலால் படத்தின் போக்கே மாறிவிட்டது. யுடியூப்பில் அந்த பாடல் ஹிட். லைக்குகள் கிடைத்தது. ஆனால், படத்துக்கு அதுவே எதிர்மறையாகி போனது.’ என சொல்லியிருந்தார்.

இதையும் படிங்க: குக் வித் கோமாளி புகழ் குழந்தை இப்போ யாரு கையில இருக்கு பாருங்க!.. அந்த படத்துல கிடைச்ச நட்பு அப்படி!

Next Story