ஒரு வரி கூட கதை கூட கேட்காமல் அஜித் நடித்த படம்!.. அதுக்கு காரணம் இதுதானாம்!..

Ajithkumar: அமராவதி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கியவர் நடிகர் அஜித். சாக்லேட் பாயாக நடிக்க துவங்கிய அஜித் அதன்பின் பல படங்களிலும் சாக்லேட் பாயாகவே நடித்தார். ஒருகட்டத்தில் பில்லா, மங்காத்தா போன்ற ஆக்‌ஷன் கதைகளில் நடிக்க துவங்கி மாஸ் ஹீரோவாகவும் மாறினார். இவருக்கென ஒரு ரசிகர் கூட்டமும் உருவானது.

தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராகவும், 100 கோடிக்கும் மேல் சம்பளம் வாங்கும் நடிகராகவும் அவர் மாறியிருக்கிறார். இப்போது விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை மகிழ் திருமேனி இயக்கி வருகிறார். இந்த படத்தில் அஜித்தின் மனைவியாக திரிஷாவும், வில்லனாக அர்ஜூனும் நடித்து வருகிறார்கள்.

இதையும் படிங்க: அண்ணன் தம்பிக்குள்ள இப்படி ஒரு பிரச்சினையா? பிரபுதேவா குடும்பத்தில் வெடிக்கும் பூகம்பம்

யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு அசர்பைசான் நாட்டில் நடந்து வருகிறது. இன்னும் ஒரு மாதத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிடும் என சொல்லப்படுகிறது. அடுத்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார் அஜித்.

அஜித்துக்கு முன்பெல்லாம் ஒரு பழக்கம் இருக்கிறது. எந்த இயக்குனரிடமும் முழுக்கதையை கேட்க மாட்டார். ஒரு வரிக் கதையை மட்டுமே கேட்பார். ஒரு இயக்குனரை நம்பியே அஜித் படங்களில் நடித்து வருகிறார். சமீபகாலமாகத்தான் முழுக்கதையையும் அவர் கேட்பதாக சொல்லப்படுகிறது. அதில் உண்மை இருக்கிறதா என தெரியவில்லை.

இதையும் படிங்க: செட்டப் செல்லப்பாவாக மாறிய சிவகார்த்திகேயன்?.. பின்னாடி டோலிவுட்டே சிரிக்குது பங்கு!..

ஒரு வரிக்கதைகளை கேட்பதற்கு முன்பு கதையே கேட்காமல் அவர் நடித்த படங்களும் பல இருக்கிறது. அதனால்தான் 90களில் பல தோல்விப்படங்களை கொடுத்தார். இந்நிலையில், கதையே கேட்காமல் ஒரு படத்தில் நடித்து அது ஹிட் அடித்தது பற்றித்தான் இங்கே பார்க்கப்போகிறோம்.

kadhal

காதல் மன்னன் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் சரண். இவர் பாலச்சந்தரிடம் உதவி இயக்குனராக வேலை செய்தவர். சமீபத்தில் ஊடகம் ஒன்றில் பேசிய அவர் ‘ஆசை படம் பார்க்கும்போதே அவர் ஒரு பெரிய நடிகரக வருவார் என எனக்கு தோன்றியது. விவேக் மூலம் அவரை சந்தித்தேன். உடனே நடிக்க சம்மதித்தார். ‘கதை சொல்லட்டுமா?’ எனக்கேட்க அவரோ ‘நீங்கள் கேபி சாரின் உதவியாளர். இது உங்களுக்கு முதல் படம். கண்டிப்பாக நல்ல கதையைத்தான் உருவாக்கி இருப்பீர்கள். நான் நடிக்கிறேன்’ என சொன்னார். அப்படி உருவானதுதான் காதல் மன்னன் திரைப்படம்’ என அவர் சொன்னார்.

இதையும் படிங்க: அச்சு அசல் அப்படியே இருக்காரே! இவர் இல்லைனா தனுஷ் இல்ல – வைரலாகும் டூப் நடிகரின் புகைப்படம்

 

Related Articles

Next Story