அஜித் மட்டுமில்ல!. விடாமுயற்சி படப்பிடிப்பில் கடுப்பான திரிஷா!.. பஞ்சாயத்து எப்ப முடியுமோ!...
ஒரு படம் துவங்கினால் எந்த பிரச்சனையும் இல்லாமல் படப்பிடிப்பு நடைபெற்று அப்படம் முடியவேண்டும். அப்போதுதான் தயாரிப்பாளர் திட்டமிட்டபடி படத்தை வெளியிட முடியும். அதே நேரம், துவக்கத்திலேயே பஞ்சாயத்து எனில் ‘முதல் கோணல் முற்றிலும் கோணல்’ என சொல்வது போல கடைசி வரைக்கும் பிரச்சனைகள் வந்து கொண்டே இருக்கும்.
அஜித்தின் விடாமுயற்சி படமும் இப்படித்தான் பிரச்சனையில் சிக்கியது. முதலில் விக்னேஷ் சிவன் இயக்குனர் என அறிவிக்கப்பட்டு பின்னர் அவர் தூக்கப்பட்டார். அதன்பின் மகிழ் திருமேனி இயக்குனராக அறிவிக்கப்பட்டார். ஆனால், படத்தின் கதை உறுதி செய்யப்படாமல் சில மாதங்கள் இழுத்துகொண்டே போனது.
ஒருவழியாக இதுதான் கதை என முடிவு செய்து அஜர்பைசானில் படப்பிடிப்பை துவங்கினார்கள். ஆனால், மழை, பனிப்புயல் என பல காரணங்களால் படப்பிடிப்பு தடை பட்டது. இப்படத்தில் அஜித்தின் மனைவியாக திரிஷாவும், வில்லனாக நடிகர் அர்ஜூனும் நடித்து வந்தனர்.
ஒருகட்டத்தில் நிதிநெருக்கடியால் சிக்கிய லைக்கா பணம் இல்லாமல் படப்பிடிப்பு நின்று போனது. இதனால் அஜித், திரிஷா, அர்ஜூன் ஆகியோர் தங்களின் கால்ஷீட் வீணாய் போனதால் கோபப்பட்டார்கள். அதோடு, அஜித் குட் பேட் அக்லிக்கும், திரிஷா வேறு படங்களுக்கும் நடிக்கப் போனார்கள்.
ஒருவழியாக மீண்டும் அவர்களிடம் கால்ஷீட் வாங்கினால் மிகவும் மெதுவாக வேலை செய்கிறாராம் மகிழ் திருமேனி. ஒரு சின்ன காட்சியை எடுக்கவே 2 மணி நேரம் எடுத்து கொள்கிறாராம். சில நாட்கள் அஜித், திரிஷா, அர்ஜூன் ஆகியோரை நாள் முழுக்க சும்மாவே உட்கார வைத்திருக்கிறாராம்.
இதன் காரணமாக மூன்று முறை திரிஷா கோபப்பட்டிருக்கிறார். அர்ஜூனும் கோபப்பட்டு பேசியிருக்கிறார். இன்னமும் விடாமுயற்சி படப்பிடிப்பு முடியவடையவில்லை. இப்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பு முடிந்தால் போதும் அடுத்த வேளையை பார்ப்போம் என காத்திருக்கிறார்கள் எல்லோரும்.