செட்ல அஜித் இப்படித்தான் இருக்க ஆசைப்படுவாரு! நடிகர் பகிர்ந்த சீக்ரெட்.. இவருக்குள்ள இப்படி ஒரு ஆசையா?

by Rohini |   ( Updated:2024-05-07 12:30:37  )
ajith
X

ajith

Actor Ajith: தமிழ் சினிமாவில் ஒரு உச்ச நட்சத்திரமாக இருப்பவர் நடிகர் அஜித். தற்போது அஜீத்தின் விடாமுயற்சி திரைப்படம் குறித்து பல செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன. லைகா நிறுவனத்தால் தயாரிக்கப்படும் அந்த திரைப்படத்தின் பாதி படப் படிப்பு முடிந்த நிலையில் மீதி எஞ்சியுள்ள 40% படப்பிடிப்புகள் லைக்காவின் பொருளாதார நெருக்கடிகள் காரணமாக அப்படியே முடங்கிப் போய் கிடக்கின்றன.

அதனால் அஜித் அடுத்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி திரைப்படத்தில் கூடிய சீக்கிரம் இணைய இருக்கிறார். அந்த படத்திற்கான வேலைகள் தான் தற்போது நடைபெற்றுக் கொண்டு வருகின்றன. பொதுவாகவே அஜித்தை பற்றி பல விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. பொது இடங்களில் அவரை பார்ப்பது மிகவும் அரிது, ரசிகர்களை அவர் சந்திப்பது கிடையாது,அவர்களுடன் புகைப்படம் எடுப்பதையும் அவர் விரும்ப மாட்டார் என பல வகைகளில் அவரைப் பற்றி பல செய்திகள் வந்து கொண்டே இருக்கின்றன.

இதையும் படிங்க: விஜய்க்கு சொன்ன கதையில அஜீத்தை நடிக்க வச்சிட்டேன்… சுந்தர்.சி. போட்டு உடைத்த ரகசியம்!

இந்த நிலையில் நடிகர் ஆடுகளம் நரேன் அஜித்தை பற்றி ஒரு சுவாரசியமான தகவலை பகிர்ந்து இருக்கிறார். அதாவது அஜித்தை பொருத்தவரைக்கும் மிகவும் டவுன் டு எர்த் பர்ஷன் என குறிப்பிட்டிருக்கிறார். அது மட்டும் அல்லாமல் டெக்னீசியன்களுக்கு என தனியாக டீ போட்டு வைத்திருப்பார்களாம். அதை அஜித்தே தானாக போய் பேப்பர் கப்பில் டீ பிடித்து அதைக் குடித்துக் கொண்டிருப்பாராம் .என்ன சார் இதெல்லாம்? என கேட்டால் அதற்கு அஜித் ‘ஆமா டீ என்று கேட்டால் எனக்காக ஸ்பெஷல் என திக்கான பாலில் டிகாஷன் அதிகமாக சுகர் அதிகமாக என போட்டுக் கொடுப்பார்கள். எனக்கு இப்படி கொஞ்சம் தண்ணியாக இருந்தால் தான் பிடிக்கும். எனக்கு பிடித்த மாதிரி குடிப்பது தானே நல்லது’ என சொல்லி அந்த டீயை குடிப்பாராம்.

அது மட்டும் அல்லாமல் படப்பிடிப்பு போக மீதி நேரத்தை கேரவனுக்கு வெளியே தான் அஜித் பொழுதை கழிப்பாராம். எங்கு நிழல் இருக்கிறது என பார்த்து அங்கு போய் உட்கார்ந்து கொண்டு வெளிக்காட்சிகளை ரசித்துக் கொண்டே இருப்பாராம்.

இதையும் படிங்க: வேறு வழியில்லாமல் லைக்காவிடம் பேசிய அஜித்! அப்புறம் என்ன ‘விடாமுயற்சி’தானே.. அதான் இல்லைங்க

Next Story