பாலா பிரச்சினைல ‘பில்லா’ ஸ்டைலில் தரமான சம்பவம் செய்த அஜித்! அவ்ளோதான் எல்லாம் ஜர்க் ஆயிட்டாங்க

by Rohini |   ( Updated:2024-02-18 05:18:19  )
ajith
X

ajith

Ajith Bala: தமிழ் சினிமாவில் ஒரு முக்கிய இயக்குனராக வலம் வருபவர் இயக்குனர் பாலா. பல வெற்றிப்படங்களை கொடுத்தவர். பலரது கெரியரை திசைதிருப்பிய பெருமைக்கு சொந்தக்காரர் பாலா. குறிப்பாக விக்ரம், சூர்யா, ஆர்யா போன்றவர்களின் வாழ்க்கையில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியவர்.

இதே போல் அஜித்தை வைத்தும் பாலா நான் கடவுள் என்ற படத்தை எடுக்க திட்டமிட்டிருந்தார். ஆர்யாவுக்கு முன் அந்தப் படத்தில் முதலில் நடிக்க இருந்தது அஜித்தான் என அனைவருக்கும் தெரியும். அதனால் அந்தப் படத்திற்காக முடியை நீளமாக வளர்க்க சொல்லியிருக்கிறார் பாலா.

இதையும் படிங்க: ஜெயிச்சாரா ஜெயம் ரவி?.. சைரன் படத்துக்காவது தியேட்டருக்கு ரசிகர்கள் வந்தாங்களா.. 2 நாள் வசூல்?

அதுமட்டுமில்லாமல் என்னை கேட்காமல் முடியை வெட்டக்கூடாது என்றும் கட்டளை போட்டிருக்கிறார். இந்த மாதிரி விஷயத்தில் பாலாவை பற்றித்தான் அனைவருக்குமே தெரியும். இதனால் அஜித் முடியை வளர்த்துக் கொண்டு நீண்ட நாள்களாக காத்துக் கொண்டிருந்தாராம். ஆனால் படம் ஆரம்பிக்கப்படாமலேயே இருந்திருக்கிறது.

அதன் பிறகு தாமதமாக படப்பிடிப்பு ஆரம்பமானதாம். அப்போது கதை விவாதத்தில் அஜித் பாலா மற்றும் படக்குழு ஒரு ஹோட்டலில் கலந்து கொள்ள அந்த நேரத்தில் ஏதோ வாக்குவாதம் வந்ததாகவும் பாலாவுடன் இருந்த நபர் அஜித்தின் முதுகில் அடித்தார் என்றும் பல செய்திகள் வந்தன.

இதையும் படிங்க: இந்த ஆண்டு வெளியான இத்தனை படங்கள் ஃபிளாப்பா?.. ப்ளூ சட்டை மாறன் லிஸ்ட்ல அந்த படம் தான் ஹிட்டா?

ஆனால் உண்மையிலேயே என்ன நடந்தது என ஒரு சினிமா பத்திரிக்கையாளர் கூறியிருக்கிறார். படத்திற்காக மதுரை அன்புச் செழியன் ஒரு கோடி ரூபாய் அட்வான்ஸ் கொடுத்தாராம். ஆனால் படம் ஆரம்பிக்க தாமதமானதால் வட்டியுடன் சேர்த்து எனக்கு 3 கோடி வேண்டும் என அன்புச்செழியன் அஜித்திடம் கேட்டதாகவும் கூறப்படுகிறது.

இதெல்லாம் ஒரு ஹோட்டல் அறையில் நடந்த சம்பவமாம். அன்புச்செழியன் அப்படி கேட்டதும் அதற்கு அஜித் ‘என்னால் படம் தாமதமாகவில்லை. பாலாவால்தான் படப்பிடிப்பு தாமதமாகியிருக்கிறது.’ என கூறியிருக்கிறார். இப்படியே அந்த விவாதம் நீண்டு கொண்டே போக,

இதையும் படிங்க: அஜித்லாம் பேசவே மாட்டாரு! விஜய் வெட்கப்படுவாரு.. 90களில் குத்தாட்டம் போட்ட நடிகை சொன்ன சீக்ரெட்

உடனே அஜித் பில்லா ஸ்டைலில் ஒரு தரமான சம்பவம் செய்தாராம். பில்லா படத்தில் அந்த சேரில் உட்கார்ந்து பேசுவதை போல ஏதோ ஒரு சம்பவம் நடந்ததாக அந்த பத்திரிக்கையாளர் கூறினார். ஆனால் அதை பொதுவெளியில் சொல்ல முடியாது என்றும் கூறினார்.

அவ்வளவுதான் மதுரை அன்புச்செழியன் உட்பட அனைவரும் பின்வாங்கி விட்டார்களாம். ஒரு ஸ்டெப் பின்னாடி அனைவரும் தள்ளிப் போக செட்டில்மெண்டை முடித்து விட்டு அஜித் கிளம்பிவிட்டதாக அந்த பத்திரிக்கையாளர் கூறினார்.

Next Story