கடைய சாத்து! இதுக்கு மேலயும் பொறுக்க முடியாது! ‘விடாமுயற்சி’யை டீலில் விட்ட அஜித்
Actor Ajith: தமிழ் சினிமாவில் மாபெரும் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் நடிகர் அஜித் . இவருக்கு என தனி ரசிகர் பட்டாளுமே இருந்து வருகிறார்கள். இவரின் நடிப்பில் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருப்பது விடாமுயற்சி திரைப்படம் .ஆனால் இந்த படம் வருமா வராதா என்ற சந்தேகம் சமீப காலமாக மக்கள் மனதில் எழுந்து வருகின்றன.
அதற்கு ஏற்ற வகையில் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பும் பாதியிலேயே கிடப்பில் போடப்பட்டிருக்கிறது. இதற்கு இடையில் அந்த படத்தை தயாரிக்கும் லைக்கா நிறுவனம் பெரும்ப பொருளாதார நெருக்கடியில் இருப்பதாகவும் அதனால்தான் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பை மேற்கொண்டு தொடர முடியாமல் கிடப்பில் போடப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகிக் கொண்டு வருகின்றன.
இதையும் படிங்க: விஜய் ஆடிய போங்காட்டம்! தயாரிப்பாளரை எங்கு கொண்டு போய் நிறுத்தியிருக்கு பாருங்க
ஒரே நேரத்தில் இந்தியன்2, வேட்டையன், விடாமுயற்சி போன்ற மூன்று படங்களை தயாரிக்கும் லைக்கா நிறுவனம் பொருளாதார நெருக்கடியினால் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பிற்கு பிரேக் கொடுத்தது. முதலில் வேட்டையன் படத்தை முடித்துவிட்டு அந்த படத்தை வியாபாரம் செய்வதன் மூலம் கிடைக்கும் பணத்தை வைத்து விடாமுயற்சி படத்தை பின் தொடரலாம் என நினைத்தது.
அதைப் போலவே வேட்டையின் திரைப்படத்தின் டீசரும் வெளியாகி அதன் வியாபாரமும் நடைபெற ஆரம்பித்தது. இருந்தாலும் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படாமல் இருந்தது. இதற்கிடையில் தேர்தலும் வந்ததால் தேர்தலுக்குப் பிறகு விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என ஒரு அறிவிப்பு வெளியானது. ஆனால் தேர்தல் முடிந்து பத்து நாட்கள் ஆன பிறகும் இன்னும் அந்த படம் ஆரம்பிக்கப்படாமலேயே இருக்கின்றன.
இதையும் படிங்க: ரஜினியிடம் நடிகைக்கு இருந்த 43 வருட பகை!. கடைசி வரைக்கும் நடக்காமலே போயிடுச்சே!..
இந்த நிலையில் விடாமுயற்சி படத்தை பற்றி ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. மே மாதத்திற்கு உள்ளேயே ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் முடித்து விடும் எண்ணத்தில் விடாமுயற்சி படத்தின் பட குழு இருந்தது. ஆனால் இன்னும் ஆரம்பிக்கப்படாததால் அஜித் மே 10ஆம் தேதியிலிருந்து தன்னுடைய அடுத்த படமான குட் பேட் அக்லி திரைப்படத்தின் படப்பிடிப்பை ஆரம்பிக்க சொல்லிவிட்டதாக ஒரு தகவல் கூறப்படுகிறது. அதனால் விடாமுயற்சி படத்தின் நிலைமை என்ன என்பது ஒரு கேள்விக்குறியாகவே இருக்கிறது.