விடாமுயற்சிக்கு அப்டேட் வந்துடுச்சுப்பா!.. மியூசிக் முதல் ரிலீஸ் வரை எப்போ தெரியுமா? அடடா!

by Akhilan |
விடாமுயற்சிக்கு அப்டேட் வந்துடுச்சுப்பா!.. மியூசிக் முதல் ரிலீஸ் வரை எப்போ தெரியுமா? அடடா!
X

Vidamuyarchi: அஜித் நடிப்பில் வெளிவர இருக்கும் விடாமுயற்சி படத்தின் அப்டேட்களுக்கு ரசிகர்கள் பல நாட்களாக காத்து இருக்கும் நிலையில் எக்கசக்க தகவல்கள் தற்போது வெளியாகி இருக்கிறது. இதை கேட்ட ரசிகர்களும் செம குஷியில் இருக்கிறார்கள்.

மகிழ் திருமேனி இயக்கத்தில் லைகா புரோடக்‌ஷன் தயாரிக்கும் படம் தான் விடாமுயற்சி. இப்படத்தில் அஜித், ஆரவ், அர்ஜூன், திரிஷா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். கிட்டத்தட்ட ஒருநாளில் நடிக்கும் கதையாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: கேப்டன் நினைவிடத்தில் கூல் சுரேஷ்! சந்தானத்திற்காக ஓடோடி வந்து மாஸ் காட்டிய சம்பவம்

பல நாளாக அஜித்துக்கு காத்து இருந்த படக்குழு இரண்டு மாதங்களாக தான் ஷூட்டிங்கில் இருக்கிறார்கள். இருந்தும் அஜர்பைனாலில் தற்போது ஏற்பட்டு இருக்கும் பனி மழையால் அங்கு படப்பிடிப்பு நடத்த முடியாத நிலை உருவாகி இருக்கிறதாம். இதனால் படக்குழு முதற்கட்ட ஷெட்யூல் முடித்துவிட்டதாம்.

அடுத்தக்கட்ட படப்பிடிப்பு ஷார்ஜாவில் நடக்கும் எனக் கூறப்படுகிறது. மேலும், ஆதிக் ரவிசந்திரனுடனான படத்தில் அஜித் இணைய இருப்பதால் படத்தின் ஷூட்டிங்கை பிப்ரவரிக்குள் முடிக்க படக்குழு திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது. மேலும், விடாமுயற்சி ஃபர்ஸ்ட் லுக் பிப்ரவரி இரண்டாவது வாரத்தில் வெளியாக இருக்கிறது.

அதற்கான ஷூட்டிங்கும் முடிந்து விட்டதாம். இப்படத்திற்காக அனிருத் 5 பாடல்களை இசையமைத்து இருக்கிறாராம். இதில் ஒரு பாடல் ஆலுமா டோலுமா போன்ற குத்துப்பாடலாக இருக்கும் எனவும் தகவல்கள் தெரிவிக்கிறது. இப்படத்தில் சுப்ரீம் சுந்தரின் ஆக்‌ஷன் காட்சிகள் பெரிய ப்ளஸாக அமையும் எனவும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: படம் சுமாருனாலும் ஹவுஸ்ஃபுல்! அதற்கு காரணம் இதுதான்.. சிங்கப்பூர் சலூன் குறித்து பிரபலம் சொன்ன தகவல்

கடைசியாக ஹைதராபாத்தில் கடைசிக்கட்ட படப்பிடிப்பு நடக்கும் எனவும், ஏப்ரல் இறுதியில் விடாமுயற்சியை ரிலீஸ் செய்யவும் படக்குழு திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கிறது. இதற்கிடையில் தொடர்ந்து அஜித்தின் லேட்டஸ்ட் ஸ்டில்கள் வேறு ரிலீஸாகி ரசிகர்களை குஷிப்படுத்தி வருவது தான் இப்போதைய ஹைலைட்டே.

Next Story