அம்மாடியோ எவ்ளோ பெரிய வீடு! கனவு இல்லத்தை கட்டி முடித்த ஆல்ய மானஸா.. வைரலாகும் வீடியோ

alya
Alyamanasa: சின்னத்திரையில் இப்போது ஒரு டாப் நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை ஆல்யமனசா. இவர் பிரபல சின்னத்திரை நடிகர் சஞ்சீவை காதலித்து திருமணம் செய்து கொண்டு இப்போது இரு குழந்தைகளுக்கு அம்மாவாக இருக்கிறார். திருமணத்திற்கு பிறகு சிறிது நாட்கள் சீரியல் பக்கமே வராமல் இருந்த ஆல்ய மானசா ராஜா ராணி 2 சீரியல் தனது செகண்ட் இன்னிங்ஸை ஆரம்பித்தார்.
அதிலிருந்து இப்போது ஒரு சில சீரியல்களில் நடித்து வருகிறார். ஆல்ய மானசா ஆரம்பத்தில் மானாட மயிலாட என்ற டான்ஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஒரு சிறந்த டான்சர் என்பதை நிரூபித்தார். அப்போது தன்னுடன் சேர்ந்து ஆடிய மானஸ் என்பவரை காதலித்து வந்த ஆல்யா மானசா இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து விட்டார்.
அந்த நிகழ்ச்சிக்கு பிறகு அவருக்கு கிடைத்த முதல் சின்னத்திரை தொடர் தான் ராஜா ராணி. அதில்தான் சஞ்சீவை முதன் முதலாக சந்தித்தார் ஆல்யா மானசா. சஞ்சீவும் ஆல்யாவும் ராஜா ராணி சீரியலில் லீடு ரோலில் நடித்திருந்தனர். அப்போது இருந்தே இருவருக்கும் காதல் மலர்ந்தது. அந்த காதல் பல ஆண்டுகளாக இருக்க சீரியல் முடிந்த கையோடு அவர்கள் இருவருக்கும் திருமணமும் நடைபெற்றது.
திருமணத்திற்கு பிறகு இப்போது வரை இருவரும் சந்தோஷமாக இருந்து வருகிறார்கள். தற்போது ஆல்யா மானசா சன் டிவியில் ஒரு தொடரில் நடித்து வருகிறார். அதேபோல சஞ்சீவ் அவருடைய கெரியரில் பிஸியாக இருந்து வருகிறார். இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு ஆல்யா தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு புது சர்ப்ரைஸோடு உங்களை சந்திக்கிறேன் என ட்விஸ்ட் வைத்திருந்தார்.
அதன் பிறகு தான் தெரிந்தது ஆல்யாவும் சஞ்சீவும் இணைந்து ஒரு பிரம்மாண்டமான வீட்டை கட்டி வருகிறார்கள் என்று. இப்போது அந்த வீட்டை கட்டி முடித்து கிரஹப்பிரவேசத்துக்காக தயாராகிக் கொண்டிருக்கிறார்கள். அது சம்பந்தப்பட்ட வீடியோ தான் இப்போது வைரலாகி வருகின்றது. சின்னத்திரை நடிகர்களிலேயே இவர்கள் தான் மிக பிரம்மாண்டமாக வீடு கட்டி இருப்பார்கள் போல .இப்படி ஒரு வீட்டை இதுவரை கண்டதில்லை என அதை பார்த்த ரசிகர்கள் தங்கள் கமெண்ட்களில் பதிவிட்டு வருகின்றனர். எப்படியோ தங்களுடைய கனவு இல்லத்தை கட்டி முடித்து விட்டார்கள் ஆல்யாவும் சஞ்சீவும்.
இதோ அந்த வீடியோ: https://www.instagram.com/reel/C8G2LRsPlZB/?igsh=MXNyMTdhOHJzazFueA==