கலாய்த்த ரசிகர்கள்.. ஓடிப்போய் அஜித்திடம் ஒப்பாரி வைத்த வெங்கட்பிரபு.. தல சொன்னது இதுதான்...

by சிவா |   ( Updated:2023-11-18 17:15:36  )
venkat prabu
X

Venkat prabu: சென்னை 28 திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் வெங்கட்பிரபு. இவர் இசையமைப்பாளர், பாடகர், மற்றும் இயக்குனர் கங்கை அமரனின் மகன். பொதுவாக இயக்குனர்கள் என்றால் சீரியஸாக இருப்பார்கள். படப்பிடிப்பு தளத்தில் தான் நினைத்தது நடக்காவிட்டால் எல்லோரிடமும் கோபத்தை காட்டுவார்கள் என்று சொல்லப்படுவதுண்டு.

ஆனால், அதை உடைத்தவர் வெங்கட் பிரபு. ஜாலியான கதைகளை எழுதி அதை தனக்கு பிடித்தவர்களுடன் சேர்ந்து ஜாலியாக படம் எடுப்பார். படப்பிடிப்பில் இவரை சீரியஸாக பார்க்கவே முடியாது. எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பார். அதோடு, படப்பிடிப்பு தளத்திலேயே நடிகர்களுடன் சேர்ந்து கிரிக்கெட் விளையாடுவார்.

இதையும் படிங்க: பரபரப்பாகும் லேடி சூப்பர்ஸ்டார்… கணவரின் ஆர்டர் தான் காரணமா? பிறந்தநாளில் ரசிகர்களுக்கு செம ட்ரீட்..!

அதோடு, 6 மணிக்கு மேல் பார்ட்டி பண்ண போய்விடுவார் என இவரை பற்றி பொதுவாக சொல்வதுண்டு. சென்னை 28, சரோஜா என சில படங்களை இயக்கிய பின் அஜித்தின் 50 வது படத்தை இயக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. அப்படி உருவான படம்தான் மங்காத்தா. வெங்கட்பிரபுதான் இயக்குனர் என அஜித் டிக் அடித்துவிட்டார்.

சில நாட்கள் படப்பிடிப்பும் நடந்தது. ஆனால், சமூகவலைத்தளங்களில் விஜய் ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் வெங்கட் பிரபு - அஜித் கூட்டணியை கடுமையாக கிண்டலடித்தனர். வெங்கட்பிரபு சீரியஸ்காக படமெடுக்க மாட்டார். அஜித் பைக் ஓட்ட போய் விடுவார். அஜித்தோட 50வது படம் தேறாது என்றெல்லாம் பதிவிட்டனர்.

இதையும் படிங்க: தமிழ் சினிமா நடிகர்களின் சொத்து பட்டியல் இதோ!.. நம்பர் ஒன் இடத்தில் இருப்பது இவரா?!…

ஒருகட்டத்தில், அப்செட்டான வெங்கட்பிரபு அஜித்தை சந்தித்து ‘சமூகவலைத்தளங்களில் என்னை கழுவி ஊத்துறாங்க சார்.. இது உங்களோட 50வது படம். ரசிகர்களுக்கும் அதிக எதிர்பார்ப்பு இருக்கு. நான் இந்த படத்துல இருந்து விலகிக்கிறேன். நீங்க, வேற டைரக்டர் படத்துல நடிங்க’ என சொல்ல அஜித் வாய்விட்டு சிரித்துவிட்டாராம்.

முகம் தெரியாத எவனோ ஒருவன் எங்கோ பேசுகிறான் என்பதையெல்லாம் தலையில் ஏற்றிக்கொண்டால் நாம் எதையுமே செய்ய முடியாது. எனக்கு உன் மேல நம்பிக்கை இருக்கு. உனக்கு உன் கதையில நம்பிக்கை இருந்தா போய் வேலைய பாரு’ என சொல்ல உற்சாகத்துடன் களத்தில் இறங்கி அந்த படத்தை வெற்றிப்படமாக கொடுத்தாராம் வெங்கட் பிரபு.

இதையும் படிங்க: தனுஷின் மகன் சிக்கியது இப்படித்தான்!. இது எப்போது நடந்தது தெரியுமா?…

Next Story