தனுஷ் கூட சேர்ந்ததுக்கு இப்போ ஒரு பட சான்ஸ் கூட கிடைக்காம இருக்காரே!.. பாவம் அனிகா சுரேந்திரன்!..

அனிகா சுரேந்தர் இன்ஸ்டாகிராமில் போட்டோக்களை போட்டு, சான்ஸ் தேடி வருகிறார் என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.;

By :  SARANYA
Published On 2025-06-10 20:25 IST   |   Updated On 2025-06-10 20:25:00 IST

கடந்த 2010ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான கதா துடருனு படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க ஆரம்பித்தார் அனிகா சுரேந்திரன். 2004ம் ஆண்டு பிறந்த அவர், 6 வயது முதலே ஏகப்பட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பிசியான ஆர்ட்டிஸ்ட்டாக மாறினார்.

தமிழ் சினிமாவில் 2015ம் ஆண்டு கெளதம் வாசுதேவ் மேனன் இயகக்த்தில் அஜித் குமார், த்ரிஷா, அனுஷ்கா, அருண் விஜய் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். உனக்கென்ன வேணும் சொல்லு என அஜித் பாட, அன்று முதல் அஜித்தின் ரீல் மகளாகவே அழைக்கப்பட்டார்.


நயன்தாராவுடன் இணைந்து நடிக்க ஆரம்பித்த நிலையில், குட்டி நயன்தாரா என்றும் இவரை ரசிகர்கள் கொண்டாட ஆரம்பித்தனர். 18 வயது ஆனதுமே குழந்தை நட்சத்திரத்தில் இருந்து முன்னேறி ஹீரோயினாக மாறினார்.

தெலுங்கில் புட்ட பொம்மா படத்தின் மூலம் 2023ம் ஆண்டு ஹீரோயினாக அறிமுகமான அனிகா சுரேந்திரன், மலையாளத்தில் ஓ மை டார்லிங், லவ்ஃபுலி யுவர் வேதா உள்ளிட்ட படங்களில் நடித்தார். தமிழில் ஹிப் ஹாப் ஆதி நடித்த பிடி சார் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த அனிகா சுரேந்திரனுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.


இந்த ஆண்டு தனுஷ் இயக்கத்தில் அவருடைய அக்கா மகன் பவிஷ் நடித்த நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். அந்த படம் பயங்கரமாக சொதப்ப அதன் பின்னர் அவருக்கு இதுவரை ஒரு படத்தில் கூட நடிக்க வாய்ப்புகள் கிடைக்கவில்லை.


இந்நிலையில், மீண்டும் இன்ஸ்டாகிராமில் போட்டோக்களை போட்டு, சான்ஸ் தேடி வருகிறார் என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News