ஜகஜால கில்லாடி ஜான்வி கபூர்!.. கேன்ஸ் திரைப்பட விழாவில் இன்னாம்மா கிக்கேத்துறாரு!..
2025ம் ஆண்டுக்கான கேன்ஸ் திரைப்பட விழாவில் முதன்முறையாக பங்கேற்று, "ஹோம்பவுண்ட்" படத்தை அறிமுகப்படுத்தினார்.;
இந்த ஆண்டு நடைப்பெற்றுக்கொண்டிருக்கும் கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்துக்கொண்ட பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் தினமும் அழகழகான உடை அணிந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார். இந்நிலையில் இன்றும் இரவில் தோன்றும் நிலவு போல் நைட் மோடில் வெள்ளை நிற உடையுடன் கவர்ச்சியான புகைப்படங்களை ஷேர் செய்துள்ளார்.
நடிகை ஸ்ரீதேவி மற்றும் போனி கபூரின் மூத்த மகளான ஜான்வி கபூர் 2018ஆம் ஆண்டு "தடாக்" என்ற ஹிந்தி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இப்படம் வணிக ரீதியாக வெற்றி பெற்றது. அதை தொடர்ந்து கன்ஜன் சக்ஷினா, மில்லி போன்ற படங்களில் நடித்துக்கொண்டிருந்த அவர் தெலுங்கில் ஜூனியர் என்டிஆருடன் தேவரா படத்தின் மூலம் தென்னிந்தியாவில் அறிமுகமானார். ஜான்வி கபூர் நடித்த படங்களிலேயே அதிக வசூல் செய்த படமாக தேவரா மாறியது.
தமிழ் மற்றும் மலையாள படங்களின் இந்தி ரீமேக்குகளில் நடித்து வருகிறார். தமிழ் திரைப்படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வரும் ஜான்வி கபூர் இயக்குநர் லிங்குசாமியின் இயக்கத்தில் உருவாகவுள்ள "பையா 2" படத்தில் நடிக்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மேலும், ஜான்வி கபூர் திருப்பதி ஏழுமலையான் மீது அதீத பக்தி கொண்டவர். தனது தாயின் பிறந்தநாள் மற்றும் நினைவு நாளில் திருப்பதி கோவிலுக்கு அடிக்கடி சென்று தரிசன்ம் செய்து வருகிறார். திருப்பதியில் குடியேறி வசிக்கவும் விருப்பம் உள்ளதாக தெரிவித்திருந்தார்.
இன்ஸ்டாகிராமில் தனது புகைப்படங்கள் மற்றும் புதிய திரைப்பட விழாக்களில் பங்கேற்ற விடியோக்களை பதிவிடுகிறார். 2025ம் ஆண்டுக்கான கேன்ஸ் திரைப்பட விழாவில் முதன்முறையாக பங்கேற்று, "ஹோம்பவுண்ட்" படத்தை அறிமுகப்படுத்தினார். மேலும், அவர் தினமும் சர்வதேச இளைஞர்களையும் சேர்த்துக் கவரும் விதமாக கேன்ஸ் திரைப்பட விழாவுக்காக பிரத்யேக கிளாமர் உடைகளை அணிந்து போஸ் கொடுத்து போட்டுத் தாக்கி வருகிறார்.