நாள் முழுக்க பாத்துக்கிட்டே இருக்கலாம்!...திரிஷாவின் அழகில் சொக்கிப்போன ரசிகர்கள்...

தமிழில் பல வெற்றி படங்களில் நடித்தவர் திரிஷா. இவர் நடிக்க வந்து 20 வருடங்கள் ஆகிவிட்டது. தமிழ் மட்டுமில்லாமல் பல தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்துள்ளார். ஒருகாலத்தில் முன்னணி நடிகையாக இருந்தார். ரஜினி, கமல், அஜித், விஜய், விக்ரம், தனுஷ், சிம்பு உள்ளிட்ட அனைத்து நடிகர்களுடன் ஜோடி சேர்த்து நடித்தவர். சினிமாவில் பல ஏற்ற இறக்கங்களை பார்த்தவர். ஒரு படம் ஹிட் அடித்தால் தொடர்ந்து சில படங்களில் நடிப்பார். அந்த படங்கள் தோல்வியை சந்தித்தால் காணாமல் போய்விடுவார். கடந்த […]

;

Published On 2022-07-10 03:34 IST   |   Updated On 2022-07-10 03:34:00 IST

தமிழில் பல வெற்றி படங்களில் நடித்தவர் திரிஷா. இவர் நடிக்க வந்து 20 வருடங்கள் ஆகிவிட்டது. தமிழ் மட்டுமில்லாமல் பல தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்துள்ளார். ஒருகாலத்தில் முன்னணி நடிகையாக இருந்தார். ரஜினி, கமல், அஜித், விஜய், விக்ரம், தனுஷ், சிம்பு உள்ளிட்ட அனைத்து நடிகர்களுடன் ஜோடி சேர்த்து நடித்தவர்.

சினிமாவில் பல ஏற்ற இறக்கங்களை பார்த்தவர். ஒரு படம் ஹிட் அடித்தால் தொடர்ந்து சில படங்களில் நடிப்பார். அந்த படங்கள் தோல்வியை சந்தித்தால் காணாமல் போய்விடுவார். கடந்த சில வருடங்களாக அவரை திரையில் பார்க்க முடியவில்லை. மணிரத்னம் இயக்கி வரும் பொன்னியின் செல்வன் படத்தில் ‘குந்தவை’ வேடத்தில் நடித்துள்ளார்.

அவ்வப்போது டிவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் தனது புகைப்படங்களை பகிர்ந்து தான் லைம் லைட்டில் இருப்பதாக காட்டிக் கொள்வார்.

இந்நிலையில், பொன்னியின் செல்வன் டீசர் வெளியீட்டு விழாவில் புடவை கட்டி கலந்து கொண்டார். மேலும், அந்த உடையில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களையும் பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

Tags:    

Similar News