அஜித் பட சூட்டிங்கில் பழுதான கேரவன்!.. திக்குமுக்காடிய நடிகர்.. தல செஞ்ச காரியம் தான் ஹைலட்..

தமிழ் சினிமாவில் முன்னனி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித். தற்போது ஏகே 62 படத்திற்கான வேலைகளில் தன்னை தயார்படுத்தி வருகிறார்.இதனிடையில் அஜித்தின் தந்தை அண்மையில் காலமாக திரைபிரபலங்கள் பலரும் வந்து தங்கள் அஞ்சலியை செலுத்தி வந்தனர். மேலும் வீடு முதல் மயானம் வரை அஜித் கூடவே இருந்து அனைத்து வேலைகளையும் கவனித்துக் கொண்டவர் நடிகர் பெசண்ட் ரவி. அதுமட்டுமில்லாமல் அஜித்தின் அம்மாவை ஷாலினி அழைத்து வரும் போது கூட அவர்களையும் பக்கத்தில் இருந்து பக்குவமாக கூட்டிக் […]

;

By :  Rohini
Published On 2023-03-28 10:21 IST   |   Updated On 2023-03-28 10:21:00 IST

ajith

தமிழ் சினிமாவில் முன்னனி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித். தற்போது ஏகே 62 படத்திற்கான வேலைகளில் தன்னை தயார்படுத்தி வருகிறார்.இதனிடையில் அஜித்தின் தந்தை அண்மையில் காலமாக திரைபிரபலங்கள் பலரும் வந்து தங்கள் அஞ்சலியை செலுத்தி வந்தனர்.

மேலும் வீடு முதல் மயானம் வரை அஜித் கூடவே இருந்து அனைத்து வேலைகளையும் கவனித்துக் கொண்டவர் நடிகர் பெசண்ட் ரவி. அதுமட்டுமில்லாமல் அஜித்தின் அம்மாவை ஷாலினி அழைத்து வரும் போது கூட அவர்களையும் பக்கத்தில் இருந்து பக்குவமாக கூட்டிக் கொண்டு வந்தார்.

ajith1

கடைசி வரை அஜித்தை காரில் ஏற்றி வழியனுப்பிய வரைக்கும் கூடவே இருந்து பார்த்துக் கொண்டவர் பெசண்ட் ரவி. அப்படி என்ன ஒரு நெருக்கம் என அவரிடம் பேட்டி கண்ட போது நீண்ட வருட பழக்கமாம் அஜித்துடன் பெசண்ட் ரவிக்கு. அஜித்துடன் சேர்ந்து பல படங்களில் நடித்திருக்கிறார்.

ஒரு படப்பிடிப்பின் போது கூட அஜித் ஒரு கேரவனில் இருந்தாராம். பெசண்ட் ரவி மற்றொரு கேரவனில் இருந்தாராம். அப்போது பெசண்ட் ரவியின் கேரவன் பழுதாகிவிட்டது. ஆனால் பெசண்ட் ரவிக்கு சூட்டிங்கிற்காக மேக்கப் போட வேண்டியிருந்ததாம்.

ajith22

இதை அறிந்த அஜித் உடனே அவருடைய கேரவனை ரவிக்காக கொடுத்திருக்கிறார். அதுமட்டுமில்லாமல் அஜித் அமர்ந்த சேரில் ரவியை அமர வைத்து மேக்கப் போட சொல்லியிருக்கிறார். கூடவே தன் கையால் காஃபியும் செய்து
கொடுத்தாராம் அஜித்.

இதையும் படிங்க : விமலுக்கு நடிப்புச் சொல்லிக்கொடுத்ததே இந்த டாப் நடிகர்தான்?… இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே!

ஆனால் மேக்கப் போட்டுக் கொண்டிருந்ததால் காஃப் ஆறிவிட்டதாம்.மீண்டும் அஜித் அதை சூடுபடுத்திக் ரவியிடம் கொடுத்தாராம். இதை அந்த பேட்டியில் கூறிய ரவி ‘அஜித் சார் மிகவும் நல்ல மனிதர். மேலும் அவரை அஜித் சார் என்று கூப்பிட்டால் பிடிக்காது என்றும் சக நடிகர்கள் என்றால் அஜித் என்றே அழைக்கச் சொல்லுவார்’ என்றும் கூறினார்.

Tags:    

Similar News