ஈஸ்வரியிடம் நெருங்கும் ராதிகா…விலகும் பாக்கியா… என்னங்க நடக்குது இங்க?
Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் பாக்கியாவிடம் வரவு, செலவுகளை வந்து ஒப்படைத்து கொண்டு இருக்கிறார் அமிர்தா. செல்வி என்னக்க லாபம் இருக்கா எனக் கேட்க அதெல்லாம் இல்லை. நஷ்டம் தான் என்கிறார். அமிர்தா மெயினில் தானே ரெஸ்டாரெண்ட் வச்சிருக்கோம். அப்புறம் ஏன் ஆளே வரலை என்கிறார். சரியாகிடும் இன்னும் கொஞ்ச நாட்கள் பார்க்கலாம் என்கிறார் பாக்கியா. செல்வி என்னக்கா கோபி சாரும் ஹோட்டல் தொடங்க போறாரா எனக் கேட்க ஆமாம். அதான் அமிர்தா சொல்லிட்டால நீ ஏன் என்கிட்டையும் […]
Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் பாக்கியாவிடம் வரவு, செலவுகளை வந்து ஒப்படைத்து கொண்டு இருக்கிறார் அமிர்தா. செல்வி என்னக்க லாபம் இருக்கா எனக் கேட்க அதெல்லாம் இல்லை. நஷ்டம் தான் என்கிறார். அமிர்தா மெயினில் தானே ரெஸ்டாரெண்ட் வச்சிருக்கோம். அப்புறம் ஏன் ஆளே வரலை என்கிறார்.
சரியாகிடும் இன்னும் கொஞ்ச நாட்கள் பார்க்கலாம் என்கிறார் பாக்கியா. செல்வி என்னக்கா கோபி சாரும் ஹோட்டல் தொடங்க போறாரா எனக் கேட்க ஆமாம். அதான் அமிர்தா சொல்லிட்டால நீ ஏன் என்கிட்டையும் கேட்கிற எனக் கேட்கிறார். உன் வாயால கேட்க தான் அக்கா என்கிறார். இதையடுத்து, ராதிகா தான் காசு கொடுத்தாங்களா எனக் கேட்கிறார். ஆமாம் என்கிறார் பாக்கியா.
இதையும் படிங்க:குட் பேட் அக்லி!.. அப்பவே இதுக்கு யாரு செட்டாவான்னு ஜோசியம் பார்த்த வெங்கட் பிரபு!.. எப்படி பாஸ்!..
உன் மாமியார் ரொம்ப பெருமையா பேசுனாங்களாமே எனக் கேட்க ஆமாம் நானும் கவனிச்சேன் என்கிறார் அமிர்தா. இதனால் கடுப்பாகும் பாக்கியா, இப்போ என்னடி அவங்க மருமகள் தானே என்கிறார். நானும் பார்த்துக்கிட்டு தானே இருக்கேன். இப்போலாம் மாமியார் ராதிகாவை தூக்கி வச்சிக்குது என்கிறார்.
விடு எனக்கு வேலை இருக்கு என பாக்கியா கடந்து சென்றுவிடுகிறார். பின்னர் செல்வி அமிர்தாவிடம் இப்படித்தான் அக்காவை எல்லாரும் ஏமாத்துறாங்க என்கிறார். வீட்டில் ராமமூர்த்திக்கு பாக்கியா கால் செய்து கொண்டே இருக்க ராதிகா போனை அட்டண்ட் செய்கிறார்.
இதையும் படிங்க: லைக்கா மீது அஜித்துக்கு கோவமா? ‘ஏகே 63’ பட போஸ்டர் வெளியிட்டதன் பின்னனி காரணம் இதுதானா?
மாமா, அத்தை சாப்பிட வேண்டும். எல்லாத்தையும் ரெடி செஞ்சி வச்சிருக்கேன். சாப்பிட சொல்லுங்கள் என்கிறார். உடனே ராதிகா ஈஸ்வரி மற்றும் ராமமூர்த்தியை அழைத்து பரிமாறிக்கொண்டு இருக்கிறார். ஈஸ்வரி ராதிகாவிடம் நல்ல முறையாக பேச ராமமூர்த்தி அதிர்கிறார்.
பாக்கியா ரெஸ்டாரெண்டை பார்க்க பழனிசாமி வர அவர்கள் இருவரும் பேசி சிரித்து கொண்டு இருக்கின்றனர். அவர்கள் இருவரையும் பார்த்து வேலை செய்யும் பெண்கள் ஜோடி நல்லா இருக்கே எனப் பேசிக்கொண்டு இருக்க அங்கே வரும் செல்வி இவங்க கல்யாணம் செஞ்சிக்கிட்டா நல்லா இருக்கும் என்கிறார்.
பாக்கியா வீட்டுக்கு வர மயூ ராதிகாவுக்காக வாசலில் காத்திருக்கிறார். புராஜெக்ட்டுக்காக செய்ய சில பொருட்களை வாங்க வேண்டும் என்கிறார். உடனே ராதிகா அழைத்து சென்று வாங்கி வீட்டுக்கு அழைத்து வருகிறார். அதை ஈஸ்வரி மற்றும் ராமமூர்த்தி பார்ப்பத்துடன் இன்றைய எபிசோட் முடிந்தது.
இதையும் படிங்க: விஜயா உங்களுக்கு ஆனா இவ்வளோ ஆசை கூடாது… வேண்டாத மருமகள்கிட்ட இதை கேட்கலாமா?