மருமகளுக்கு தான் என் சப்போர்ட்டு..! அப்போ எழில் விஷயத்துல்ல என்ன பண்ண போறீங்க பாக்கியா..?
Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் பாக்கியாவை ஈஸ்வரி அழைக்க என்னை மாதிரி ஜெனியை இங்கே அடைச்சு வக்க பாக்காதீங்க அத்தை என்கிறார். நான் ஜெனி வீட்டுக்கு வர மாட்டேன் என்கிறார். அதெல்லாம் எனக்கு தெரியாது. நீ கண்டிப்பா வர என்கூட எனச் சொல்லிவிட்டு உள்ளே சென்று விடுகிறார். இதனால் கடுப்பாகி நிற்கிறார் பாக்கியா. அதையடுத்து எழில், ராமமூர்த்தியும் பாக்கியாவுக்கு ஆறுதல் சொல்கின்றனர். ஈஸ்வரி ஜெனிகிட்ட சரியா பேசமாட்டா என்பதால் பாக்கியாவையும் உடன் போக சொல்கிறார். மாமா சொல்வதை மறுக்க […]
Bakkiyalakshmi: இன்றைய எபிசோட்டில் பாக்கியாவை ஈஸ்வரி அழைக்க என்னை மாதிரி ஜெனியை இங்கே அடைச்சு வக்க பாக்காதீங்க அத்தை என்கிறார். நான் ஜெனி வீட்டுக்கு வர மாட்டேன் என்கிறார். அதெல்லாம் எனக்கு தெரியாது. நீ கண்டிப்பா வர என்கூட எனச் சொல்லிவிட்டு உள்ளே சென்று விடுகிறார்.
இதனால் கடுப்பாகி நிற்கிறார் பாக்கியா. அதையடுத்து எழில், ராமமூர்த்தியும் பாக்கியாவுக்கு ஆறுதல் சொல்கின்றனர். ஈஸ்வரி ஜெனிகிட்ட சரியா பேசமாட்டா என்பதால் பாக்கியாவையும் உடன் போக சொல்கிறார். மாமா சொல்வதை மறுக்க முடியாமல் அமைதியாகி விடுகிறார் பாக்கியா.
இதை தொடர்ந்து ஜெனி வீட்டுக்கு வந்திருக்கும் ஈஸ்வரி குழந்தையை பார்க்க உள்ளே செல்ல ட்ரை செய்ய ஜெனி அம்மா தடுத்து விடுகிறார். நாங்க பார்க்க கூடாதா எனக் கோபமாகி விடுகிறார் ஈஸ்வரி. நீங்க பாத்ததெல்லாம் போதும். இனி நான் பார்த்துக்கிறேன் என்கிறார்.
இதையும் படிங்க: என் படம் கூட ஜெயிலரை கம்பேர் பண்ணாதீங்க.. கொந்தளித்த பாட்ஷா பட இயக்குநர்
எல்லா வீட்டைலையும் நடக்கிற விஷயம் தானே இது என ஈஸ்வரி கேட்க எல்லா வீட்டுலையும் நடக்காது. உங்க வீட்டில் நடக்கும் என்கிறார் ஜெனி அம்மா. இதையடுத்து பாக்கியா நான் உன்கிட்ட இதை எப்படி ஜெனி சொல்ல முடியும் எனப் பேசுகிறார். ஆனால் அவர் பேச்சை முழுதாக கேட்காத ஜெனி நீங்களும் இந்த நிலைமைல இருந்து இருக்கீங்க.
அப்போ தள்ளி தானே இருந்தீங்க. உங்களுக்கு நடந்தா பிரச்னை. நான் மட்டும் வந்து வாழணுமா? உங்களுக்கு நான் சப்போர்ட்டா தானே இருந்தேன். இதே நிலைமைல இனியா இருந்தா என்ன பண்ணுவீங்க? அந்த பையன் கூட வாழுணு சொல்லி அனுப்புவீங்களா எனக் கேட்கிறார். இதையடுத்து ஈஸ்வரியை சமாதானம் செய்து அழைத்து சென்று விடுகிறார் பாக்கியா.
வீட்டில் ஜெனி வந்திடுவால அப்பா என செழியன் கோபியிடம் ஹாலில் பேசிக்கொண்டு இருக்கிறார். இதையடுத்து வீட்டுக்கு வரும் ஈஸ்வரி எல்லாம் பாக்கியாவால தான். அவ தான் எதுவுமே பேசலை என்கிறார். என்ன பேச சொல்றீங்க? அவ கேட்டதுல நியாயம் தானே இருந்துச்சு. இனியாக்கு நடந்தா நாம என்ன பண்ணுவோம்னு கேட்டால? எனக்கு நடந்தப்போ அவ எனக்கு சப்போர்ட்டா இருந்தால எனக் கூறுகிறார்.
இதையும் படிங்க: ஆபிரேஷனுக்கு ஷேர் கொடுக்கலை..! இதுக்கு மட்டும் ஷேரா? என்ன விஜயா நியாயம்..!
இதையடுத்து கோபி பழசை ஏன் பேசுற என்கிறார். நான் ஜெனி எடுக்கும் முடிவுக்கு தான் சப்போர்ட்டா இருப்பேன் எனத் திட்டவட்டமாக கூறிவிடுகிறார். இதையடுத்து பேங்க் லோனுக்காக வளையலை அடகு வைக்க செல்வியிடம் கொடுக்கிறார் பாக்கியா. இதையடுத்து மசாலா கம்பெனி இருக்கும் வீட்டை ஓனர் காலி செய்ய சொல்லிவிட்டதாக கூறி விடுகிறார். ஈஸ்வரி அதுவும் போச்சா எனக் கோபமாக கூற கவலையில் பாக்கியா இருப்பதுடன் இன்றைய எபிசோட் முடிவடைந்தது.