விஜயைப் பத்தி நான் எதையும் பேச விரும்பல... அந்த பேண்ட் சட்டையே போதும்! தெறித்து ஓடும் சாமி யாரு?
விஜயைப் பத்தி பேசுனா கல்லை விட்டு எரிவாங்களாம்..!
நடிகர் விஜய் சினிமா, அரசியல் என இரு களத்தில் இப்போது பயணித்து வருகிறார். அவருடைய மாநாடு வேலைகள் இப்போது ஜரூராக நடந்து வருகிறது.
அதே போல அவரது கடைசி படத்திற்கான வேலைகளும் நடந்து வருகின்றன. இப்போது அவர் தளபதி 69 என்ற தற்காலிக தலைப்பிட்ட படத்தில் ஹெச்.வினோத் இயக்கத்தில் நடித்து வருகிறார்.
அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க உள்ளார். இந்தப் படத்தில் நடிக்கும் நடிகர்கள் பற்றிய அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. அந்த வகையில் இந்தப் படத்தில் பாபி தியோல் வில்லனாக நடித்துள்ளார்.
விஜய் நடித்துள்ள 68வது படமாக கோட் வெளியானது. இதை வெங்கட்பிரபு இயக்கி இருந்தார். படம் கலவையான விமரசனங்களை சந்தித்தது. இந்தப் படத்திற்கு பிறகு விஜய் கடைசியாக நடிக்கும் படம் தான் தளபதி 69.
இந்தப் படத்திற்கான பூஜையும், மாநாட்டுக்கான அடிக்கல் நாட்டும் பூஜையும் ஒரே நாளில் நடந்தது. அந்த வகையில் விஜய் பூமி பூஜையில் கலந்து கொள்ளாமல் விஜய் 69க்கான பூஜையில் கலந்து கொண்டார்.
அதற்கான ஸ்டில்களையும் தயாரிப்பு நிறுவனம் கேவிஎன் சமூக வலைதளங்களில் பகிர்ந்து ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை உண்டாக்கி இருந்தது. விஜய் பட்டு வேட்டி, பட்டு சட்டையில் மாஸாக என்ட்ரி கொடுத்து இருந்தார்.
இந்நிலையில் மதுரை ஆதீனத்திடம் விஜய் குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் சொன்ன பதில் இதுதான்.
வேண்டாம் அய்யா, சினிமாக்காரங்க பத்தி எதுவும் கேக்காதீங்க. விஜயை பத்தி நான் எந்தக் கருத்தும் சொல்ல விரும்பல. அவர் ரசிகர்கள் எல்லாம் என்ன கல்ல விட்டு எரிவாங்க...
போன முறையே விஜயைப் பத்தி நான் ஏதோ பேசப்போய் எனக்கு பேண்ட் சட்டை எல்லாம் போட்டு விட்டாங்க. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். சமீபத்தில் விஜய் தனது அரசியல் பிரவேசம் எப்படி இருக்கும், எனக்கு அரசியல் தெரியாதா என்றெல்லாம் ஆவேசமாகப் பேசி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.