ஓயாத ரெட் கார்ட் சர்ச்சை… மாயாவின் அடுத்த எவிக்சன் ப்ளான்… கமலுக்கு அடுத்த வாரம் எமகண்டம் தான் போல..!

Biggboss Tamil: பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளரான ப்ரதீப் ஆண்டனிக்கு ரெட் கார்ட் கொடுத்த பிரச்னை இன்னமும் ஓயாத நிலையில், கமலின் தீர்ப்பை சில போட்டியாளர்கள் விமர்சிக்க பிரச்னை விஸ்வரூபம் எடுத்து இருக்கிறது.  கடந்த வார பிக்பாஸ் இறுதி வாரத்தில் ஷோ தொடங்கியதுமே சில போட்டியாளர்கள் எழுந்து உரிமைக்குரல் என நின்றனர். இந்த விஷயத்தினை கேட்ட கமல்ஹாசன் அத்தனை பேரையும் கன்பர்ஷன் ரூமுக்குள் அழைத்து ரெட் கார்ட் கொடுக்கலாமா வேண்டாமா என்பது குறித்து கேட்டார். ஆனால் ப்ரதீப் தரப்பு […]

By :  Akhilan
Update: 2023-11-06 05:00 GMT

Biggboss Tamil: பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளரான ப்ரதீப் ஆண்டனிக்கு ரெட் கார்ட் கொடுத்த பிரச்னை இன்னமும் ஓயாத நிலையில், கமலின் தீர்ப்பை சில போட்டியாளர்கள் விமர்சிக்க பிரச்னை விஸ்வரூபம் எடுத்து இருக்கிறது.

கடந்த வார பிக்பாஸ் இறுதி வாரத்தில் ஷோ தொடங்கியதுமே சில போட்டியாளர்கள் எழுந்து உரிமைக்குரல் என நின்றனர். இந்த விஷயத்தினை கேட்ட கமல்ஹாசன் அத்தனை பேரையும் கன்பர்ஷன் ரூமுக்குள் அழைத்து ரெட் கார்ட் கொடுக்கலாமா வேண்டாமா என்பது குறித்து கேட்டார். ஆனால் ப்ரதீப் தரப்பு வாதத்தினை கேட்கவே இல்லை.

இதையும் படிங்க: ஜெயிலர் என்ன? பொன்னியின் செல்வன் ரிக்கார்டையே பிரேக் செஞ்ச லியோ!

இதில் வெளியில் பூகம்பமாக வெடித்து கமலையே கழுவி ஊற்றி வரும் நிலையில் இதே பிரச்னை வீட்டுக்குள்ளும் சர்ச்சையாகி இருக்கிறது. பூர்ணிமா, மாயா எல்லாம் ப்ளான் செய்தே ப்ரதீப்பை வெளியேற்றி விட்டதாக தினேஷ், விசித்ரா ஆகியோர் நாமினேட் செய்தனர்.

இதில் வெளியில் சொல்லப்பட்டதை அடுத்து இரு வீட்டாரும் முட்டிக்கொண்டனர். அதிலும் தினேஷ், அர்ச்சனா அவருக்கு நாங்க சாதகமாக பேசவில்லை. இருந்தும் அவர் மீது வுமன் கார்ட் கொடுத்து ரெட் கார்டு கொடுக்க வைத்தது நியாயம் இல்லை என வாதிட்டனர். இதையடுத்து அங்கு சலசலப்பு நிலவியது.

இதையும் படிங்க: ராஷ்மிகா மந்தனாவின் Deepfake வீடியோ வைரல்.. ஆதரவாக களமிறங்கிய சூப்பர்ஸ்டார்..!

இதையடுத்து மாயா, அர்ச்சனா, தினேஷ் மற்றும் விசித்ரா ஆகியோர் இங்கு இருக்கவே கூடாது. ப்ரதீப்புக்கு சப்போர்ட் செய்கிறார்கள். இந்த வாரம் நான் உரிமைக்குரல் தூக்க போறேன் என டயலாக் விட்டார். ஏற்கனவே ஒரு பிரச்னைக்கே கமல் செமையாக டோஸ் வாங்கி வருகிறார்.

இதில் மீண்டும் உரிமைக்குரலா? இதில் ஜோவிகா போன்ற போட்டியாளர்கள் சிலரோ ஸ்மால்பாஸ் வீட்டில் இருப்பவர்களை வெளியில் போ என்பதும் அத்துமீறி சைகை காட்டுவதும் பார்க்கும் ரசிகர்களுக்கே கோபத்தினை ஏற்படுத்தி இருக்கிறது.

ப்ரதீப் பிரச்னை ஒரு பக்கம் எகிறி இருக்கும் நிலையில் இந்த பிரச்னையை பற்றி கமல் யார் பக்கம் பேசுவார். மாயா பக்கம் பேசினால் ரசிகர்களே அடிப்பார்கள். இல்லை அர்ச்சனா பக்கம் பேசினால் ப்ரதீப் விஷயத்தில் தப்பு செய்து விட்டதாக ஆகிவிடும். என்ன நடக்கிறது எனப் பொறுத்திருந்து பார்ப்போம்.

Tags:    

Similar News