வாத்தியாரையே ஓரங்கட்டிருச்சே.. விடுதலை 2-வ தூக்கி சாப்பிட்ட முஃபாசா.. அடிதூள் கலெக்ஷன்!..
விடுதலை திரைப்படம்: நடிகர் விஜய் சேதுபதி, சூரி, மஞ்சு வாரியர், கென் கருணாஸ், கௌதம் மேனன், ராஜீவ் மேனன் ஆகியோர் நடிப்பில் நேற்று வெளியாகி திரையரங்குகளில் வெற்றிநடை போட்டு வருகின்றது விடுதலை 2 திரைப்படம். இந்த திரைப்படத்தை இயக்குனர் வெற்றிமாறன் இயக்கியிருந்தார்.
இந்த திரைப்படம் நேற்று வெளியாகி மக்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்று வருகின்றது. கடந்த ஆண்டு வெளிவந்த விடுதலை திரைப்படத்தின் முதல் பாகத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. இந்த திரைப்படத்தின் மூலமாக காமெடி நடிகராக இருந்த சூரிக்கு ஹீரோ என்கின்ற ஒரு அடையாளம் கிடைத்தது.
திரைப்படம் வெளியாகி சினிமா விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களிடையே பாசிடிவ்வான விமர்சனங்களை பெற்று வந்தாலும் ஒரு சிலர் படம் தங்களை பெரிதாக கவரவில்லை என்கின்ற கருத்தை கூறி வருகிறார்கள். மேலும் நடிகர் விஜய் சேதுபதி படம் முழுக்க அரசியல் வசனங்களை அதிக அளவில் பேசியிருக்கின்றார் என்று கூறியிருக்கிறார்கள்
விடுதலை 2 வசூல்:
முதல் நாள் விடுதலை 2 திரைப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தாலும் தமிழகத்தில் நல்ல வசூலை தான் பெற்றிருக்கின்றது. முதல் நாளில் இந்த திரைப்படம் இந்தியா முழுவதுமாக மொத்தம் ஏழு கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக 6.6 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகின்றது. உலக அளவில் இந்த திரைப்படம் மொத்தமாக 8 கோடி ரூபாய் வசூல் செய்து இருக்கின்றது.
முஃபாசா:
விடுதலை 2 திரைப்படத்திற்கு போட்டியாக ஹாலிவுட் அனிமேஷன் திரைப்படமான முஃபாசா நேற்று உலகம் எங்கும் வெளியானது. கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான த லயன் கிங் என்ற திரைப்படம் வெளியாகி இருந்த நிலையில் இதன் தொடர்ச்சியாக முஃபாசா திரைப்படம் எடுக்கப்பட்டிருக்கின்றது. த லயன் கிங் திரைப்படம் வெளியான முதல் நாளிலேயே உலகம் முழுவதும் 190 மில்லியன் டாலர் வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்திருந்தது.
ஆனால் தற்போது இந்த திரைப்படத்தின் இரண்டாவது பாகம் படமாக வெளியான முஃபாசா திரைப்படம், மற்றொரு ஹாலிவுட் திரைப்படத்துடன் வெளியான காரணத்தால் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் சற்று தோல்வியை சந்தித்து இருக்கின்றது.
படத்தின் வசூல்:
உலக அளவில் இப்படத்திற்கு வரவேற்பு இல்லை என்றாலும், இந்தியாவில் இப்படத்திற்கு முதல் நாள் வசூல் சிறப்பாகவே அமைந்திருக்கின்றது. இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுவது டப்பிங் தான். அனிமேஷன் திரைப்படமாக இருந்தாலும் அதில் வரும் விலங்குகளுக்கு பிரபல நடிகரான ஷாருக்கானும், மகேஷ்பாபுவும் டப்பிங் பேசி இருந்தார்கள்.
தமிழில் அர்ஜுன் தாஸ், அசோக் செல்வன், நாசர், சிங்கம்புலி, ரோபோ சங்கர், விடிவி கணேஷ் ஆகியோர் குரல் கொடுத்திருந்ததால் இந்திய அளவில் இந்த திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு இருக்கின்றது. அதிலும் தமிழகத்தில் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கின்றது. பல தமிழ் படங்களில் இந்த ஆண்டு முதல் நாளில் ஒரு கோடி ரூபாய் வசூலை எட்டாத நிலையில் முஃபாசா திரைப்படம் முதல் நாளில் ஒரு கோடி ரூபாய் வசூலை எட்டி இருக்கின்றது.
மேலும் ஆங்கில மொழியில் 4 கோடி ரூபாயும், ஹிந்தியில் 3 கோடி ரூபாயும், தெலுங்கில் 2 கோடி ரூபாயும் இந்த திரைப்படம் வசூல் செய்திருக்கின்றது. இந்தியாவில் இந்த திரைப்படம் 10 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகின்றது. இந்த வசூல் ஆனது வரும் வாரங்களில் நிச்சயம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
விடுதலை 2 திரைப்படமே இந்திய அளவில் 7 கோடி ரூபாய் வசூல் செய்திருந்த நிலையில், அனிமேஷன் திரைப்படமான முஃபாசா 10 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கின்றது.
Also Read : கங்குவா, கரிகாற் சோழன் பாத்துமா தோணல.. வேள்பாரிக்காக ஷங்கர் தேடும் நடிகர் யார் தெரியுமா?