1000 கோடியை நெருங்கும் வசூல்!.. தியேட்டரில் வேற லெவலில் ஆட்டம் போடும் புஷ்பா 2..!
புஷ்பா 2 திரைப்படத்தின் 5வது நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகி இருக்கின்றது.
புஷ்பா 2:
இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் புஷ்பா. அல்லு அர்ஜுன் மற்றும் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியான திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. 1000 கோடி வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் ஹிட் கொடுத்த நிலையில் இப்படத்தின் இரண்டாவது பாகத்தை எடுக்க தயாரானார்கள்.
அந்த வகையில் கடந்த மூன்று வருடங்களாக இப்படத்தின் இரண்டாவது பாகம் எடுக்கப்பட்டு கடந்த டிசம்பர் 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி இருக்கின்றது. இப்படத்தை மைத்ரி மூவி மேக்கரஸ் நிறுவனம் தயாரித்திருக்கின்றது. மேலும் தேவி ஸ்ரீ பிரசாத் படத்திற்கு இசையமைத்திருக்கின்றார். படம் திரையரங்குகளில் வெளியான முதல் நாளிலிருந்து பட்டையை கிளப்பி வருகின்றது. விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் அனைத்து ரெக்கார்டுகளையும் பிரேக் செய்து முதல் இடத்திற்கு முன்னேறி வருகின்றது.
படத்தின் விமர்சனம்:
படத்தின் இரண்டாவது பாகத்திற்கு ரசிகர்கள் தொடர்ந்து பாசிட்டிவான விமர்சனங்களை கொடுத்து வருகிறார்கள். படம் ரசிகர்களுக்கு திருப்தி அளிக்கும் விதமாக அமைந்துள்ளது. கமர்சியல் படம் என்றாலே லாஜிக்குகளை விட்டு விட வேண்டும் என்பது பொதுவான கருத்து. அதிலும் தெலுங்கு மசாலா படம் என்றால் சொல்லவா வேண்டும். சண்டைக் காட்சிகளில் மிகச் சிறப்பாக இறங்கி பட்டையை கிளப்பி இருக்கின்றார் இயக்குனர் சுகுமார்.
பாடல்கள் மட்டுமே மிகுந்த கிளாமரான வகையில் இருந்திருந்தது. அதை மட்டும் தவிர்த்து இருந்தால் நிச்சயம் நன்றாக இருந்திருக்கும் என்பது ரசிகர்களின் கருத்து. ஆனாலும் தமிழ், தெலுங்கு மொழிகளை தாண்டி ஹிந்தி மொழியில் இந்த திரைப்படம் மிக பெரிய வெற்றியை கொடுத்து வருகின்றது. ஹிந்தியில் இந்த அளவுக்கு வரவேற்பு கிடைக்கும் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை.
படத்தின் வசூல்:
படத்தின் வசூல் படக்குழுவினருக்கு மிக திருப்திகரமாக அமைந்திருக்கின்றது. முதல் நாளே இதுவரை இந்திய சினிமா வரலாற்றில் எந்த படமும் எட்டாத சாதனையை இந்த படம் படைத்திருந்தது. முதல் நாள் மட்டும் ரூபாய் 294 கோடி வசூல் செய்து அதிரவிட்டது. அடுத்தடுத்த நாட்களிலும் படம் வசூலில் சாதனை படைத்து வருகின்றது.
அந்த வகையில் நேற்று படம் உலகம் முழுவதும் 829 கோடி வசூல் செய்திருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார்கள். 6வது நாளான இன்று படம் தொடர்பான வசூல் வெளியாகியிருக்கின்றது. இந்தியாவில் மொத்தம் கிட்டத்தட்ட 20 கோடி ரூபாய் படம் வசூல் செய்துள்ளது. அதேபோல் வெளிநாடுகளிலும் மிகப்பெரிய வசூலை குவித்து வருகின்றது.
இதனால் படம் தற்போது 900 கோடி ரூபாயை கடந்து இருக்கின்றது என்று தகவல் வெளியாகியிருக்கின்றது. விரைவில் படம் 1000 கோடியை வசூல் செய்து பட்டையை கிளப்பும் என்று ரசிகர்கள் நம்பி வருகிறார்கள். படம் ரிலீஸாகி மிக குறைவான நேரத்தில் 1000 கோடி வசூல் செய்த படம் என்கின்ற சாதனையையும் புஷ்பா 2 திரைப்படம் படைக்கும் என்று படக்குழுவினர் நம்பி வருகிறார்கள்.