Pushba 2: புஷ்பா 2 படத்தின் 4ம் நாள் வசூல்... இந்தி பாக்ஸ் ஆபீஸில் முதலிடம்
புஷ்பா 2 படத்தோட 4ம் நாள் வசூல் விவரம்
புஷ்பா 2 படம் வெளியானதில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுகிறது. சமூக வலைதளங்களிலும் ரொம்ப பாசிடிவான விமர்சனங்களே இருந்து வருகிறது.
அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா இருவரும் ஜோடியாக நடித்து அசத்தியுள்ளார்கள். பாடல்களிலும் சிறப்பான நடனம் பட்டையைக் கிளப்புகிறது. பல்வேறு தரப்பு ரசிகர்களும் இதை வரவேற்றுள்ளனர். குறிப்பாக கோரியோகிராபரை மிகவும் பாராட்ட வேண்டும்.
பைட்டும் மாஸாக உள்ளது. இந்தப் படம் செம்மரக் கடத்தை மையமாகக் கொண்டு புதுமையாக எடுக்கப்பட்டுள்ளது. படத்தின் முதல் நாள் முதல் காட்சியில் ரசிகர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்தது. ஐதராபாத்தில் உள்ள திரையரங்கில் அல்லு அர்ஜூன் ரசிகர்களுடன் சேர்ந்து படம் பார்க்க வந்துள்ளார்.
அப்போது அதிமாக கூட்ட நெரிசல் இருந்தது. அந்த நெரிசலில் சிக்கி 32 வயதான பெண் ஒருவரும், அவரது 9 வயது மகனும் சிக்கித் தவித்தனர். இதில் அந்தப் பெண் பலியானார். அந்த சிறுவன் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டான். இது அல்லுவுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்தக் குடும்பத்திற்கு உண்டான அனைத்து செலவுகளையும் பார்ப்பதாகவும் உறுதி அளித்துள்ளார்.
தமிழகத்தில் படம் காண்பித்து வரும் திரையரங்க உரிமையாளர்கள் சிலர் புஷ்பா 2 படம் மாஸ் தான். ஆனால் முதல் பாகத்தைப் போல இல்லை என்றே சொல்கின்றனர். அதே நேரம் படம் பார்க்க வரும் ரசிகர்களின் எண்ணிக்கை மட்டும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.
கடந்த 2 நாள்களாக விடுமுறை தினம் என்பதால் கலெக்ஷன் நல்லா இருந்தது. அந்த வகையில் இன்று (திங்கள் கிழமை) முதல் படத்திற்கான வசூல் சற்று குறைய ஆரம்பிக்கும். தற்போது கடந்த 4 நாள்களில் படத்தின் வசூல் விவரம் எப்படி உள்ளது என்று பார்ப்போம்.
கடந்த 3 நாள்களில் இந்திய அளவில் மட்டும் 387.95 கோடியை வசூலித்துள்ளது. 4வது நாளில் மட்டும் 141.50 கோடியை இந்தியாவில் வசூலித்துள்ளது.4வது நாளில் புஷ்பா 2 அனைத்து மொழிகளிலும் சேர்த்து மொத்தமாக 141.50 கோடியை வசூலித்துள்ளது. அந்தவகையில் மொத்தம் 529.45 கோடியை இதுவரை வசூலித்துள்ளது.
அதிலும் இந்தியில் டப்பிங்கான இந்தப் படம் நேற்று மட்டும் 85 கோடியை வசூலித்து அனைவரையும் பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளது. பாக்ஸ் ஆபீஸ் இந்தியில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. இதுவரை நிகர லாபம் மட்டும் 150 கோடி.