ஷாருக்கானையே ஓவர் டேக் செய்த புஷ்பா ராஜ்!.. புஷ்பா 2 ஹிந்தி வசூல் இவ்வளவு கோடியா?!..

புஷ்பா 2 படத்தின் வசூல் ஷாருக்கான் படத்தை தாண்டியிருக்கிறது.

By :  Murugan
Update: 2024-12-08 04:06 GMT

pushpa2

Pushpa 2: புஷ்பாவின் வோல்ட் ஃபயர் உலகமெங்கும் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. ரசிகர்களிடம் மிகவும் அதிக எதிர்பார்ப்பு கொண்ட படமாக இப்படம் வெளியாகி வசூலில் சக்கை போடு போட்டு வருகிறது. ஆந்திர சினிமா மட்டுமில்லாமல் இந்திய அளவில் புஷ்பா 2 படம் அதிக வசூலை பெற்றிருக்கிறது.

சில வருடங்களுக்கு முன்பு வெளியான புஷ்பா படத்தின் முதல் பாகம் சூப்பர் ஹிட் அடித்தது. அதற்கு காரணம் செம்மரக்கட்டை கடத்தும் கும்பலை பற்றி புதுமையான கதையாக எழுதியிருந்தார் சுகுமார். ஸ்ரீதேவி பிரசாத் இசையில் பாடல் எல்லாம் சூப்பர் ஹிட் அடித்தது. அல்லு அர்ஜூன் - ராஷ்மிகா மந்தனா கெமிஸ்ட்ரியும் திரையில் நன்றாகவே வொர்க் அவுட் ஆகியிருந்தது.

இந்த படம் நல்ல வசூலை பெறவே இரண்டாம் பாகம் அதிக பட்ஜெட்டில் உருவானது. முதல் பாகத்தில் ‘புஷ்ப்பான்னா ஃபிளவர்னு நினைச்சியா.. ஃபயரு’ என்கிற பன்ச் வசனத்தை இரண்டாம் பாகத்திற்காக ‘ஃவோல்ட் ஃபயரு’ என மாற்றினார்கள். டிசம்பர் 5ம் தேதி இப்படம் வெளியானது.


இதுவரை இந்த இந்திய சினிமாவுக்கும் இல்லாத வகையில் அட்வான்ஸ் புக்கிங்கே 100 கோடியை தொட்டது. படம் வெளியான முதல் நாளே இப்படம் வெளியான 2 நாட்களில் 449 கோடியை வசூல் செய்து சாதனை படைத்திருக்கிறது. அப்படி பார்க்கும்போது இந்த படம் 1000 கோடி வசூலை தொட்டுவிடும் என்றே கணிக்கப்படுகிறது.

இந்நிலையில், புஷ்பா 2 பாலிவுட்டிலும் சாதனை படைத்து வருகிறது. 2 நாட்களில் இப்படம் ஹிந்தியில் 131 கோடி வசூலை அள்ளியிருப்பதாக சொல்லப்படுகிறது. ஷாருக்கானின் பதான் படம் முதல நாள் வசூலாக 123 கோடியை வசூல் செய்ததே இதுவரை ரெக்கார்டாக இருந்தது.

அந்த சாதனையை புஷ்பா 2 முறியடித்திருக்கிறது. இதன் மூலம் ஷாருக்கானை ஓவர் டேக் செய்திருக்கிறார் அல்லு அர்ஜூன். ஒரு தெலுங்கு சினிமா ஹீரோ ஹிந்தியில் முதலிடத்தை பிடித்திருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

Tags:    

Similar News