Viduthalai 2: முதல் நாள் வசூலைத் தாண்டிய 2ம் நாள் வசூல்... விடுதலை 2 கலெக்ஷன் ரிப்போர்ட்

By :  Sankaran
Update: 2024-12-22 02:30 GMT

விடுதலை 2ம் பாகம் அதன் முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து உருவாகி உள்ளது. முதல் பாகத்தில் கதையின் நாயகனாக சூரி நடித்து இருந்தார். இது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை உண்டாக்கியது.

ஏன் என்றால் இவ்வளவு அருமையான நடிப்பை எப்படி ஒரு காமெடி நடிகரால் நடிக்க முடிந்தது என்பது தான். தொடர்ச்சியாக 2ம் பாகத்திலும் அதே போல சிறப்பாக நடித்துள்ளார். ஆனால் இந்தப் பாகத்தில் பெரும்பாலான காட்சிகளில் விஜய் சேதுபதியே வருகிறார்.

வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான விடுதலை 2 படத்தில் விஜய் சேதுபதி, சூரி, மஞ்சுவாரியர், அனுராக் காஷ்யப், கௌதம் மேனன், ராஜீவ் மேனன், பவானி ஸ்ரீ, இளவரசு, பாலாஜி சக்திவேல், சேத்தன் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படம் பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய துணைவன் என்ற சிறுகதையைத் தழுவி திரைப்படமாக எடுக்கப்பட்டுள்ளது.


படத்திற்கு இளையராஜா இசை அமைத்துள்ளார். பாடல்களில் மெலடி அருமை. தினம் தினமும், மனசுல ஆகிய பாடல்கள் நெஞ்சில் நிற்கின்றன. வேல்ராஜின் ஒளிப்பதிவில் சத்யமங்கலம் காட்டுப்பகுதி அழகாக கண்ணைக் கவர்கிறது.

படத்திற்கு பாசிடிவ்வான விமர்சனங்கள் வந்த வண்ணம் உள்ளன. முதல் பாகத்தில் இருந்த விறுவிறுப்பு இந்த 2ம் பாகத்திலும் உள்ளது. என்றாலும் முதல் பாதி தொய்வாக உள்ளதாகவும் விமர்சனங்கள் வந்துள்ளன. படத்தில் பெரும்பாலான காட்சிகளில் பெருமாள் வாத்தியாராக வரும் விஜய்சேதுபதி தத்துவங்களாக உதிர்க்கிறார் என்று விமர்சனம் வருகிறது. மற்றபடி படம் அருமையாக உள்ளது என்கிறார்கள்.

படத்தில் விஜய்சேதுபதி, மஞ்சுவாரியார் ஜோடியின் நடிப்பு பிரமாதமாக உள்ளது. முதல் பாகத்தில் குமரேசனாக வந்து சூரி கலக்கினார். அதில் விஜய்சேதுபதி கொஞ்சமாகவே வந்தார். ஆனால் இரண்டாம் பாகம் முழுக்க அவர்தான். அற்புதமாக நடித்துள்ளார்.

என்ன ஒரே ஒரு குறை தான். படத்தில் எப்போது பார்த்தாலும் விஜய் சேதுபதி தத்துவமாக உதிர்க்கிறார். அது ஒரு கட்டத்தில் ரசிகர்களுக்கு போர் அடிக்க ஆரம்பித்து விடுகிறது. படத்தில் கம்யூனிசம் சற்று ஓங்கி ஒலிக்கிறது. இது வெற்றிமாறனின் கம்யூனிச கையேடா என்றும் விமர்சனங்கள் வந்த வண்ணம் உள்ளன. அதே நேரம் படம் பாமர மக்களுக்கும் புரியும் வகையில் எளிமையாக சொல்லப்பட்டுள்ளது அருமை.

முதல் நாளில் மட்டும் விடுதலை 2 இந்தியா முழுவதும் அனைத்து மொழிகளிலும் சேர்த்து 7.5 கோடி வசூலித்துள்ளது. 2ம் நாளில் 8 கோடி வசூலித்துள்ளது. மொத்தம் 15.50 கோடி வசூலித்துள்ளது. தொடர் விடுமுறை காரணமாக வசூல் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News