ரொம்ப வருஷமா கேட்குறீங்க!.. அந்த படம் அடுத்த வருஷம்!.. செம அப்டேட் கொடுத்த தனுஷ்!...
Kuberaa: நடிகர் தனுஷ் பல படங்களிலும் நடித்திருந்தாலும் வெற்றிமாறன் இயக்கத்தில் அவர் நடித்த எல்லா படங்களுமே அவருக்கு பேர் வாங்கிக் கொடுக்கும் படங்களாகவே அமைந்தது. பொல்லாதவன் துவங்கி, ஆடுகளம், வட சென்னை, அசுரன் போன்ற படங்கள் தனுஷுக்கு முக்கிய படங்களாக இருக்கிறது.
இதில் ஆடுகளம் மற்றும் அசுரன் போன்ற படங்கள் தனுஷுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதையும் பெற்றுக்கொடுத்தது. இதில் வட சென்னை படத்தில் முதலில் விஜய் சேதுபதி நடிப்பதாக இருந்தது. ஆனால், சில காரணங்களால் அது நடக்கவில்லை. எனவே, தனுஷ் நடித்தார்.
இந்த படத்தில் இயக்குனர் அமீருக்கு முக்கிய வேடம் கிடைத்தது. அவரின் நண்பர்கள் அவரை கொன்றுவிட்டு அவரின் இடத்தை பிடிக்க அவர்களை கொல்வதற்காக அமீரின் மனைவி எடுக்கும் முயற்சிகள்தான் படத்தின் கதை. இந்த படத்தில் அசத்தலான வேடத்தில் நடித்திருந்தார் தனுஷ்.
தனுஷ், வெற்றிமாறன், லைக்கா நிறுவனம் மூவரும் இணைந்து இப்படத்தை தயாரித்திருந்தனர். 2018ம் வருடம் வெளியான இப்படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட் அடித்தது. இந்த படத்தியில் அடுத்த பாகத்திற்கான லீட் வைத்திருந்தார்கள். ஆனால் 7 வருடங்கள் ஆகியும் வட சென்னை இரண்டாம் பாகம் வெளியாகவில்லை.
இது தொடர்பாக பல முறை வெற்றிமாறனிடம் கேள்வி கேட்கப்பட்டபோதும் அவர் சரியான பதிலை சொல்லவில்லை. நடிகர்கள் அமையும்போது கண்டிப்பாக எடுப்பேன் என சொல்லி வருகிறார். ஒருபக்கம், வட சென்னை மக்களை வெற்றிமாறன் தவறாக காட்டியிருந்தார் என்கிற விமர்சனமும் எழுந்தது.
இந்நிலையில், குபேரா பட இசை வெளியீட்டு விழாவில் பேசிய தனுஷ் ‘2018ம் வருஷத்துல இருந்து கேட்குறீங்க. அடுத்த வருஷம் நடக்கும்’ என கூறினார். அவர் வட சென்னை 2 படத்தைத்தான் சொல்கிறார் என புரிந்துகொண்ட தனுஷ் ரசிகர்கள் கைத்தட்டி ஆரவாரம் செய்தார்கள். தனுஷுடன் வெற்றி மாறன் மீண்டும் இணைவதாக சமீபத்தில் செய்திகள் வெளியானது. அது வட சென்னை 2 என்பது இப்போது தெரியவந்திருக்கிறது.