பிறந்தநாளை செமயா செலிபிரேட் பண்ணப்போகும் சூர்யா!.. 2 நாளைக்கு ஒரே பார்ட்டிதான்!...
Actor surya: நேருக்கு நேர் படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கியவர் சூர்யா. அதன்பின் நந்தா, காக்க காக்க, பிதாமகன் போன்ற படங்களில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானார். ஜோதிகாவுடன் தொடர்ந்து நடித்ததில் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. துவக்கத்தில் இதற்கு சூர்யாவின் அப்பா சிவக்குமார் சம்மதிக்கவில்லை.
சூர்யா உறுதியாக இருந்ததால் ஒருகட்டத்தில் ஏற்றுக்கொண்டார். அதன்பின் சூர்யா - ஜோதிகா திருமணம் நடந்தது. தமிழகத்தில் தமிழ் முறைப்படியும், ஜோதிகாவுக்காக மும்பையில் வடநாட்டு முறைப்படியும் என திருமணம் நடந்தது. ஜோதிகாவை சூர்யா எப்போது திருமணம் செய்து கொண்டாரோ அப்போதே மும்பையை சேர்ந்தவர்களே அவருக்கு நண்பர்களாக மாறினார்கள்.
பெரும்பாலும் அவர்கள் ஜோதிகாவின் உறவினர்களாக இருக்கிறார்கள். சென்னையில் சூர்யாவுக்கு அதிக நண்பர்கள் இல்லை என்கிறார்கள். பல வருடங்களாக சென்னையில் கூட்டு குடும்பமாக வாழ்ந்து வந்த சூர்யா சில வருடங்களுக்கு முன் மனைவி ஜோதிகாவுக்காக மும்பையில் வீடு வாங்கி செட்டில் ஆனார்.
தற்போது அங்கிருந்தே ஷூட்டிங்கில் கலந்துகொள்கிறார். மேலும் இந்தியில் படங்களை தயாரிக்கவும் துவங்கிவிட்டார். சூரரைப்போற்று படத்தை அக்ஷய் குமாரை வைத்து ஹிந்தியில் எடுத்தார். ஒருபக்கம், சூர்யாவை ஹிந்தியில் நடிக்க வைக்கவும் ஜோதிகா முயற்சி செய்து வருகிறார்.
இந்நிலையில், சூர்யாவுக்கு வருகிற 23ம் தேதி பிறந்தநாள் வருகிறது. இது அவரின் 50வது பிறந்தநாளாகும். எனவே, அதை சிறப்பாக கொண்டாட திட்டமிட்டிருக்கிறார் சூர்யா. வருகிற சனி, ஞாயிறு இரண்டு நாட்களும் மும்பையை சேர்ந்த நண்பர்களுடன் கோவாவில் கொண்டாடுகிறார். அதன்பின் 2 நாட்கள் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள வீட்டில் இங்குள்ள நண்பர்களுடன் கொண்டாட திட்டமிட்டிருக்கிறாராம். அதற்கான வேலைகள் இப்போது நடந்து வருகிறது.
ஒருபக்கம் சூர்யா ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் கருப்பு படத்தில் நடித்து வருகிறார். அதேபோல், லக்கி பாஸ்கர் இயக்கத்தில் ஒரு புதிய படத்திலும் நடித்து வருகிறார்.