ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தின் டைட்டில் டீசர் ரிலீஸ் அப்டேட்!.. சும்மா அதிருது!...
#image_title
Jason Sanjay: ரசிகர்களால் தளபதி என அழைக்கப்படும் நடிகர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய். விஜய் நடித்த வேட்டைக்காரன் படத்தில் அப்பா விஜயுடன் இணைந்து நடனமும் ஆடியிருப்பார். எனவே, கண்டிப்பாக எதிர்காலத்தில் ஜேசன் நடிகராக களமிறங்குவார் என்றே எல்லோரும் எதிர்பார்த்தார்கள். ஆனால் அவரோ இயக்குனராக மாறி எல்லோருக்கும் ஆச்சர்யம் கொடுத்தார்.
பள்ளி படிப்பை சென்னையில் முடித்த ஜேசன் அதன்பின் அம்மாவுடன் லண்டனுக்கு சென்று அங்கு செட்டில் ஆனார். அங்கு சினிமா இயக்கம் பற்றிய சில படிப்புகளையும் படித்தார். அதன்பின் நண்பர்களுடன் சேர்ந்து குறும்படங்களை இயக்கினார். அதன்பின் சினிமாவுக்கு ஏற்றது போல் ஒரு கதை எழுதினார்.
லைக்கா நிறுவனத்திடம் அந்த கதையை சொல்லி படம் டேக் ஆப் ஆனது. பட அறிவிப்பு வெளியாகி ஒரு வருடம் கழித்தே ஷூட்டிங் துவங்கியது. இந்த படத்தில் சந்தீப் கிஷன் ஹீரோவாக நடிக்க தம்பி ராமையா உள்ளிட்ட பலரும் நடித்து வருகிறார்கள். இந்த படம் பற்றிய எந்த அப்டேட்டும் இதுவரை வெளியாகவில்லை. ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் மட்டுமே வெளியானது.
தற்போது இந்த படம் தொடர்பான அப்டேட்டுகள் வெளிவர துவங்கியிருக்கிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு பல இடங்களிலும் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் பேங்காங்கில் ஒரு வாரம் இப்படத்தின் படப்பிடிப்பு நடந்தது. அடுத்து ஆகஸ்டு முதல் வாரம் சென்னையில் அடுத்தக்கட்டப் படப்பிடிப்பு நடக்கவுள்ளது.
இந்நிலையில், வருகிற ஆகஸ்டு 15ம் தேதி இப்படத்தின் டைட்டில் டீசரை வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள் என்கிற செய்தி வெளியே கசிந்திருக்கிறது. ஜேசன் சஞ்சய் படத்திற்கு கண்டிப்பாக விஜயின் ரசிகர்கள் ஆதரவு கொடுப்பார்கள். அதேநேரம், ஒரு இயக்குனராக ஜேசன் சஞ்சய் என்ன செய்திருக்கிறார் என்பதை பார்க்க அவர்கள் ஆவலாக இருக்கிறார்கள்.