மாரிசன் ஸாரிசன்!.. படம் எப்படி இருக்கு?!.. டிவிட்டர் விமர்சனம்!...
Maareesan: நடிகர் வடிவேலும், பஹத் பாசிலும் ஏற்கனவே மாரி செல்வராஜ் இயக்கிய மாமன்னன் படத்தில் நடித்திருந்தனர். தற்போது மாரீசன் படம் மூலம் மீண்டும் இணைந்திருக்கிறார்கள். சுதீஷ் சங்கர் என்பவர் இப்படத்தை இயக்கியுள்ளார். ஆர்.பி.சவுத்ரி இப்படத்தை தயாரித்துள்ளார். இந்த படம் ஜூலை 25ம் தேதியான நாளை வெளியாகவுள்ளது.
இந்நிலையில், நேற்று இப்படத்தின் ப்ரீமீயர் ஷோ திரையிடப்பட்டது. இதில், சினிமா பத்திரிக்கையாளர்கள் உள்ளிட்ட பலரும் படம் பார்த்தார்கள். அவர்கள் டிவிட்டரில் படம் எப்படி இருந்தது என பதிவிட்டு வருகிறார்கள். வலைப்பேச்சு அந்தனன் தனது டிவிட்டர் பக்கத்தில் ‘மாரிசன் ஸாரிசன்’ என பதிவிட்டிருக்கிறார். அவருக்கு படம் பிடிக்கவில்லை போல. ஆனால், இன்ஃப்ளூயன்சர்ஸ் என சொல்லப்படுபவர்கள் டிவிட்டரில் பாசிட்டிவான கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
எமோஷனலான படம். யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசை படத்தில் ஹைலைட். படத்தின் இரண்டாம் பாதியில் வரும் டிஸ்ட் சிறப்பு’ என ஒருவர் பதிவிட்டிருக்கிறார்.
படம் மெதுவாகவே துவங்கினாலும் இடைவேளை காட்சியும், 2ம் பாதியும் நன்றாக இருக்கிறது. சில காட்சிகள் சிரிக்க வைக்கிறது. படத்தின் இறுதியில் நல்ல சமூக கருத்தை சொல்லியிருக்கிறார்கள். வழக்கம் போல் வடிவேலும், பஹத் பாசிலும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.
நல்ல திரில்லர் டிராமாக மாரீசன் உருவாகியிருக்கிறது. முதல் பாதி சஸ்பென்சாக போகிறது. இரண்டாம் பாதி எமோஷனலாக இருக்கிறது என ஒருவர் பதிவிட்டிருக்கிறார். மாரீசன் ஒரு தைரியமான முயற்சி. இயக்குனர் சுதீஷ் சங்கர் சிறப்பாக இயக்கியுள்ளார் என ஒருவர் சொல்லியிருக்கிறார்.
இவர்களெல்லாம் இன்ஃப்ளூயன்சர்ஸ். படங்களை பற்றி பாசிட்டிவாகவே சொல்வார்கள். உண்மையில் ரசிகர்களின் கருத்தே முக்கியமானது. ரசிகர்களுக்கு இப்படம் பிடிக்குமா என்பது நாளை படம் வெளியானவுடன் தெரிந்துவிடும்.