கூலி வேர்ல்டு லெவல் பிசினஸ் எவ்ளோ தெரியுமா? அடேங்கப்பா இத்தனை கோடியா?

By :  SANKARAN
Published On 2025-07-24 16:38 IST   |   Updated On 2025-07-24 16:38:00 IST

லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் அடுத்த மாதம் திரைக்கு வர உள்ள சூப்பர்ஸ்டார் ரஜினியின் படம் கூலி. இந்தப் படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். இதுவரை வந்த 3 பாடல்களும் பட்டையைக் கிளப்புகின்றன. ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் படத்துக்கான ரிலீஸ் தேதிக்காகக் காத்துக் கிடக்கின்றனர். படத்தின் பிசினஸ் குறித்து மூத்த பத்திரிகையாளர் திண்டுக்கல் வெங்கடேஷ் என்ன சொல்றாருன்னு பாருங்க.

கூலி படத்துக்கு வாய்ஸ் ஓவர் கமல் கொடுக்குறதா சொல்றாங்க. பொன்னியின் செல்வன்லயே கொடுத்துருக்காரு. இது இன்னும் கமலுக்கிட்ட லோகேஷ் சொல்லல. பேசப்போறாரு. சொன்னா செய்வாரு. ரஜினி மிகப்பெரிய நண்பர். கமல் வாய்ஸ் கொடுத்தா அது பிளஸ்தான். ரஜினி சார் ரிஜெக்ட் பண்ணல.

கூலி படத்தோட பிசினஸ் ஹெவியா பேசப்பட்டு இருக்கு. ஓடிடியும், சேட்டிலைட்டுமே 120 கோடி. உலகளவில் டோட்டலா பார்க்கும்போது 600 கோடி வரை பிசினஸ் பேசப்பட்டு வருது. உலகளவில் எல்லா சென்டர்லயும் படம் போகுது. நார்த் இண்டியால மல்டிபிளக்ஸ்லயும் போடுறதா பேசப்பட்டுருக்கு. அதுக்கான ஒப்பந்தமும் போடப்பட்டுருக்குறதா தகவல் இருக்கு.

அப்படி ரிலீஸ் ஆனா அதோட ரேஞ்ச் வேற மாதிரி இருக்கும். 8 வாரத்துக்கு அப்புறம் தான் ஓடிடியில வர்றதா அக்ரிமெண்ட் ரெடி பண்ணிருக்காங்க. மொத்தத்துல இதெல்லாம் கூட்டிக் கழிக்கும்போது 1000 கோடியைத் தாண்டுற அளவுல இருக்கு. ஐமேக்ஸ் பேசப்போறாங்க. கண்டிப்பா 8 வாரத்துக்கு அப்புறம்னா கண்டிப்பா ஐமேக்ஸ் கிடைக்கும். அதுக்கு வாய்ப்புகள் நிறைய இருக்கு. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.  


ஆகஸ்டு 15 சுதந்திர தினம். அரசு விடுமுறை. ஆகஸ்டு 14 படம் ரிலீஸ். படம் ரிலீஸ் ஆவதோ வியாழக்கிழமை. அப்படி என்றால் வரிசையாக 3 விடுமுறை நாள்கள் வருகிறது. படத்துக்குப் போட்டியாகவும் எந்தப் படமும் வராது. ரஜினி சிங்கம்மாதிரி சிங்கிளாத் தான் வருவார். 3 நாளும் லீவுங்கறதால படம் வசூலில் பட்டையைக் கிளப்பும். முதல் நாள் ரசிகர்கள் கூட்டம் தெறிக்க விடும் என்பதில் சந்தேகமில்லை.

Tags:    

Similar News